புதிர் வாக்கியம்:
ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான தெய்வத்தின் ஊரிலுள்ள (A) தன் சொந்த வீட்டில் பிறந்தநாளைக் (B) கொண்டாட அவன் பளபளக்கும் ஆடையணிந்து (C) மிடுக்குடன் நடந்து வந்த போது அவன் ஓரு அக்பரின் பட்டம் (D) போல் இருந்தான் என்பதில் கொஞ்சங்கூட (E) சந்தேகமில்லை.
விடை வாக்கியம்:
நாமக்கல்லிலிருக்கும் (A) தன் சொந்த வீட்டில் ஜனனதினத்தைக் (B) கொண்டாட அவன் பட்டுடுத்தி (C) மிடுக்குடன் நடந்து வந்த போது அவன் ஓரு பேரரசன் (D) போல் இருந்தான் என்பதில் எள்ளளவும் (E) சந்தேகமில்லை.
ஜனனதினம் என்பதை பிறந்த திதி என்றும் நான் எண்ணாத மற்றொரு மாற்று சொல்லும் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே எழுத்து அடுத்தடுத்து ஒரே சொல்லில் இடம்பெறுவதுதான் விசேஷமான ஒற்றுமை. பார்க்கப்போனால் ஆங்கிலம் போல் தமிழில் இயல்பாக எந்த எழுத்தும் இரட்டிப்பதில்லை (இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள், நான் பத்து ரூபாய்க்கு ஒன்று என்று பணங் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்).
மற்றோர் சொல்லுடன் இணையும் போதுதான் தமிழில் எழுத்துகள் இரட்டிக்கின்றன.
ஜனனம், திதி -- இவை இரண்டும் வடமொழி
மற்றவையெல்லாம் ஒட்டு முறையில் ஜனனமானவை:
நாமக்கலில் இருக்கும்
பட்டு உடுத்தி
பெருமை அரசர் (மையீற்றுப் பண்புப் பெயர்களைத் தொடர்ந்து உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் வர .... கொட்டாவி வரும் இலக்கணத்தை முழுதாகக் கூறினால்)
எள் அளவும்
-------------
புதிருக்கான விடையைக் கண்டு பிடித்தவர்கள்.
1. அம்பிகா 2. ஹரி பாலகிருஷ்ணன் (5 விடைகளும்)
நாமக்கல்லிருக்கும் என்ற முதல்விடையை அதிகப்படியான குறிப்பாகக் கொண்டு ம் மற்ற 4 விடைகளும் கண்டுபிடித்தவர்கள்:
3. ரவி சுப்ரமணியன்
4. கேசவன்
5. உஷா
6. பாலு மீ
7. சதீஷ்பாலமுருகன்
8. மீனாக்ஷி

Comments
Repetition of a "sound" maybe harsh on the speaker and the listener. English spelling being a non-phonetic, repetition of letters often does not translate to repetition of sound. On the contrary Tamil spelling is phonetic. Several loan words from Sanskrit exhibit this repetition.
"பிறந்ததிதி" என்பதுதான்.
மனனம்-மனப்பாடம்
எனக்கும் ஒரு பத்து ரூபாய் எடுத்து வைத்துவிடுங்கள்
பேரரவம் கேட்டிலையோ?
மாமாங்கம்
மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுகள் வடமொழி வழி வந்தவை அல்லது இரு சொற்களின் சேர்க்கையால் வந்தவை. "போதாதா?" என்ற ஒன்று மட்டுமே எனக்கு தோன்றுகிறது.
போதாது என்பதின் கேள்வி வடிவம்
புக்ககம், இயக்ககம்...ஆனால் 2 வார்த்தைகள் சேர்ந்து வந்துள்ளன
அருமை. பத்து ரூபாய் வாங்கி விடுங்கள்.
மனனம் சரிதானே?
ஓருருவம்
தங்ககம்பி
பாருருவம் ( பாருருவாய பிறப்பற வேண்டும்)
தங்கக்கம்பி
சொல்லலங்காரம் செய்துவிட்டோம்.
வார்த்தைகள் கூறலாமே!
ஆமாம். கண்டிடின் தேடிடின் ஓடிடின் சாடிடின் என்றும் வரிசை கட்டலாம்
The answers submitted by me 👇🏽
A.கும்பகோணத்தில்
B. ஜன்மதினத்தைக்
C.பட்டாடையணிந்து
D.சக்ரவர்த்திப்
E.இம்மியளவுகூட
The common factor being the number of lettets in each word being (8).