இன்றைய வெடி:
காயப்போட்டு திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)
இதற்கான விடை: உலர்த்தி = உத்தி + (ப)லர்
புயலும் மழையும் கொட்டப்போகிறது என்று முன்னேற்பாடாகக் காலையிலேயே துவைத்துத் துணியைக் காயப்போட்ட சென்னைவாசிகளுக்காக இந்த புதிர்!
புயல் வந்தாலும் வராவிட்டாலும் வாடிக்கைபோல் காலை 6 மணியளவில் நாளைய வெடி வீசப்படும் (120கிமீ வேகத்தில், ஜாக்கிரதை!)
காயப்போட்டு திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)
இதற்கான விடை: உலர்த்தி = உத்தி + (ப)லர்
புயலும் மழையும் கொட்டப்போகிறது என்று முன்னேற்பாடாகக் காலையிலேயே துவைத்துத் துணியைக் காயப்போட்ட சென்னைவாசிகளுக்காக இந்த புதிர்!
புயல் வந்தாலும் வராவிட்டாலும் வாடிக்கைபோல் காலை 6 மணியளவில் நாளைய வெடி வீசப்படும் (120கிமீ வேகத்தில், ஜாக்கிரதை!)
Comments
1) 6:06:17 ராஜா ரங்கராஜன்
2) 6:07:03 எஸ்.பார்த்தசாரதி
3) 6:08:05 ராதா தேசிகன்
4) 6:08:07 இரா.செகு
5) 6:08:35 முத்துசுப்ரமண்யம்
6) 6:10:08 கேசவன்
7) 6:10:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:10 ரவி சுப்ரமணியன்
9) 6:11:34 சங்கரசுப்பிரமணியன்
10) 6:13:36 சதீஷ்பாலமுருகன்
11) 6:13:45 மு.க.இராகவன்.
12) 6:14:05 ரவி சுந்தரம்
13) 6:14:18 சங்கரசுப்பிரமணியன்
14) 6:14:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
15) 6:15:02 சுந்தர் வேதாந்தம்
16) 6:16:31 உஷா
17) 6:16:38 வி ன் கிருஷ்ணன்
18) 6:17:02 லதா
19) 6:17:04 K. R. Santhana.
20) 6:17:43 வி ன் கிருஷ்ணன்
21) 6:18:07 KB
22) 6:27:47 கி மூ சுரேஷ்
23) 6:36:59 லக்ஷ்மி ஷங்கர்
24) 6:38:48 சாந்தி நாராயணன்
25) 6:39:01 Siddhan Subramanian
26) 6:41:33 மு க பாரதி
27) 6:48:58 சந்திரசேகரன்
28) 6:51:48 ராஜி ஹரிஹரன்
29) 7:05:02 மடிப்பாக்கம் தயானந்தன்
30) 7:06:51 ஹரி பாலகிருஷ்ணன்
31) 7:11:02 ஆர்.நாராயணன்.
32) 7:12:15 பா நிரஞ்சன்
33) 7:17:25 மீ கண்ணன்
34) 7:21:09 புவனா சிவராமன்
35) 7:22:34 மாலதி
36) 7:28:12 அம்பிகா
37) 7:33:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
38) 7:51:48 ராமராவ்
39) 7:52:00 கு.கனகசபாபதி, மும்பை
40) 7:55:06 பினாத்தல்
41) 7:56:49 நாதன் நா தோ
42) 8:12:57 எஸ் பி சுரேஷ்
43) 8:26:41 பிரசாத் வேணுகோபால்
44) 8:31:46 தேன்மொழி
45) 8:38:13 மீனாக்ஷி கணபதி
46) 9:27:11 மீனாக்ஷி
47) 9:54:28 ஸௌதாமினி
48) 9:59:58 கோவிந்தராஜன்
49) 10:46:25 ருக்மணி கோபாலன்
50) 13:19:21 ஆர். பத்மா
51) 15:01:47 ரமணி பாலகிருஷ்ணன்
52) 15:02:04 நியாஸ்
53) 16:38:48 வானதி
54) 18:02:43 M baloo
55) 18:52:24 Sandhya
56) 19:14:19 மாதவ்
57) 19:35:03 ஶ்ரீவிநா
**********************
A peek into today's riddle!
**********************
*உத்தி* (இலக்கியம்)
உத்தி என்பதன் விளக்கம் என்னவென்று நன்னூல் விளக்குகிறது. ஒரு நூலால் அறிவிக்கப்படும் பொருளை உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய வழக்குகளோடு பொருத்திக் காட்டவேண்டும். அப்பொருளை மற்ற நூல்களிலும் (குறிப்பாக இலக்கிய நூல்களில்) ஏற்ற இடமறிந்து இவ்விடத்திற்கு இப்படி எனத் தக்கபடி பொருத்திக் காட்டி நூலை நடத்திச் செல்ல வேண்டும். இதுவே தந்திர உத்தியாகும்.
_"நூற்பொருள்_ _வழக்கொடு வாய்ப்பக்_ _காட்டி, ஏற்புழி_ _அறிந்திதற்கு இவ்வகை யாமெனத் தகும்வகை_ _செலுத்துதல் தந்திர உத்தி."_
நன்னூல்(15)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*_உத்தி_*
பெயர்ச்சொல்
ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும் _திறமையான வழிமுறை;_
ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய திறமையான திட்டம்.
**********************
_காயப்போட்டு திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)_
_திறமையான வழிமுறையில்_
= *உத்தி*
_பலர் தொடங்கவில்லை_
= *லர்*
_காயப்போட்டு_
= *உத்தி <----லர்*
= *உலர்த்தி*
**********************
சிவனடியார்களின் துணிகளை துவைத்து *காயப்போட்டு* தொண்டு செய்தார் ஒரு நாயன்மார், காஞ்சிபுரத்தில்!
இதோ அவரைப்பற்றிய சிறு குறிப்பு.
*_திருக்குறிப்புத் தொண்டர்:_*
63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் படுபவர்.
சிவனடியார்களின் குறிப்பு அறிந்துத் தொண்டு செய்த தன்மையாளர்.
அடியவர்களின் உடையை துவைத்து *உலர்த்திக்* கொடுக்கும் புனிதமான திருத்தொண்டைப் புரிந்து வந்தார். அடியவர்களின் உடையில் உள்ள மாசை நெடுங்காலம் நீக்கிய பண்பால், ஆன்மாவில் படிந்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்கறைகளும் நீங்கப் பெற்றார்
💐🙏🏼💐
🙏🙏🙏