Skip to main content

Posts

Showing posts from 2024

Krypton 451

    Krypton 451 (3rd November, 2024)  ****************** To provide cross after  ardent followers  initially (6)   Click here and find the form to fill in your solution

திரிவெடி 31 விடைகள்

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: மாமரம், பலாமரம், வாழைமரம், தென்னை மரம், பனைமரம் அதற்கான விடை:  வாழைமரம் மற்றவற்றுடன் சேராதது . மற்ற நான்கும் ஆண்டுதோறும் பலனளிப்பவை. வாழை ஒரு முறைதான் குலைதள்ளும். இது நான் எண்ணிய விடை, ஆனாலும் இம்முறை திரிவெடிக்கு வேறு  விடைகள் வந்துள்ளன. ஆர் பத்மா, வாழையின் தண்டுப்பகுதியும் உணவாகும் மற்ற‌வற்றில் அப்படி கிடையாது என்கிறார்.  இது முழுதும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடை. வி. ஆர். பாலகிருஷ்ணன் பலா மட்டும் தனித்துக் காய்க்கும் மற்றவை குலைகளாகக் காய்க்கும் என்கிறார்.    மற்ற மரங்களெல்லாம் உச்சியில் காய்க்க, பலா மட்டும் வேரருகிலும் காய்க்கும் என்று முத்துசும்ரம்ணியம் கூறும் காரணமும் பொருத்தமானதே.மாமரத்தில் காய்களைக் குலையாகக் காண்கிறோமா? சந்தேகமாக இருக்கிறது. ஜோசப் அமிர்தராஜ், அருள் இருவரும் வாழையை மரம் என்ற கணக்கில் சேர்க்கமுடியாது, தாவரம்தான் என்கிறார்கள். அதன் மூலம் வாழை தடித்து உறுதியாக வளர்வதில்லை என்று புரிந்துகொள்கிறேன். பச்சையாகவே அது நின்றுவிடுகிறது, அதன் விளைவாக அது விறகாகப் பயன்படாது என்று சொல்ல வருகிறார்களோ? அம்பிகா பல விடைகளை அளித்துள்ளார்.

உதிரிவெடி 4315

    உதிரிவெடி 4315 ( நவம்பர் 03, 2024) வாஞ்சிநாதன் *********************** சூரியனை இழுப்பதும் அதனால் தோன்றுவதும் பற்றி ஆய்ந்துபார் (4)   விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 31

    திரிவெடி 31 (2/11/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   மாமரம், பலாமரம், வாழைமரம், தென்னை மரம், பனைமரம் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4316

  நேற்றைய வெடி: வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) அதற்கான விடை:    சிற்றுந்து = சிந்து + காற்று சிந்து = நதி ற்று = காற்று, தலை பிய்த்தது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   நேற்றைய திரிவெடிக்கான விடைகளைக் கண்டு கருத்துரையில் குணா எழுதிய வெண்பாவைப் பலரும் கவனிக்காமற் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதை இங்கே நகலெடுத்து அளிக்கிறேன்: சிந்தை மயக்கும் திரிவெடிப் போட்டிக்கு வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய் நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன் சாலவும் ஒற்றுமை தான்.  குணா அவர்களே, நாலு பேர் சொன்னால் அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்! கூர்மதியால் கண்டுரைத்த குணாவுடன் நால்வரின் சீர்மிகு  சிந்தனையைச் செப்பிடுவேன் இத்தருணம் ஊர்தெரிய இங்கே உணர்ந்து.

Krypton 450

    Krypton 450 (27th October  2024)  ****************** *** Relevant to in-house expert in entomology (9)  SOLUTION will appear tomorrow 6pm Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4316

   உதிரிவெடி 4316 ( அக்டோபர் 27, 2024) வாஞ்சிநாதன் ****************** வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 30 விடைகள்

     நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்: இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது  இதில் தனியானது:  கார் நாற்பது   மற்ற நான்கும் நீதிநெறி நூல்கள். கார்நாற்பது மட்டும் அகத்திணை சார்ந்தது.   நான் எதிர்பாராத சரியான வேறு விடையும் வந்துள்ளது. நாலடியர் மட்டும் பல புலவர்களெழுதியதைத் திரட்டித் தொகுத்த நூல். மற்றவை ஒவ்வொன்றும் தனி ஆசிரியரால் எழுதப்பட்டவை. இப்புதிர் விடையளிப்போரிடமிருந்து நான் எப்போதும் புதியதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றி!   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

திரிவெடி 30

  திரிவெடி 30 (26/10/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4315

 நேற்று காலை வெளியான வெடி ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6)  அதற்கான விடை :  மூக்கடைப்பு = ஜலதோஷத்தின் விளைவு                                           =  மூப்பு + பூக்கடை- பூ மூப்பு = வயோதிகம் நேற்று  மாலை ஏழரை மணிவாக்கில் கருத்துரை இடும்  பகுதியில் பெயரிலியாக ஒருவர் விடையை எழுதிவிட்டார். அதை திரு மு க ராகவன் சுட்டிக் காட்டிய பின் நீக்கிவிட்டேன்.  நீக்கும் முன் அது கண்ணில் பட்டுவிட்டதால் புதிரவிழ்க்கும் வாய்ப்பை இழந்ததாக இருவர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இ தை த் தவிர்க்க,   கருத்து அளிக்க விரும்புவர்கள் மறுநாள் விடைக்கான பதிவில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது விடையோ, அதிகக் குறிப்புமோ இல்லாதவாறு கருத்தை எழுதுங்கள்.   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Solution to Krypton 449

   Yesterday's clue: It is not OK to have extended binary operations initially in a laptop (8) Its solution:  NOTEBOOK  =   NOT+ebo+ OK  E,B,O = starting letters of Extended Binary Operations. NOTEBOOK (computer) is a laptop computer. Initially I had a different clue for this. With my laptop pushed to be in a corner , I changed to this. Meet you next Sunday EVENING at 6pm! Visit this page to see all the solutions received.

உதிரிவெடி 4315

    உதிரிவெடி 4315 ( அக்டோபர் 20 , 2024) வாஞ்சிநாதன் *********************** ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6)   விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 449

    Krypton 449 (20th October, 2024)  ****************** It is not OK to have extended binary operations initially in a laptop (8)   Click here and find the form to fill in your solution

திரிவெடி 29 விடை

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: அரசன், நெருப்பு, மலர், கொடி, பசு அதற்கான விடை:  கொடிதான் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கு சொற்களுக்கும் அதே பொருள் தரும் ஓரெழுத்துச் சொற்கள் உள்ளன. அரசன் = பூ; நெருப்பு = தீ; மலர் = பூ; பசு = ஆ அரசனைத் தவிர மற்றவை இயற்கையில் தோன்றுபவை, அரசன் மற்றும் உயர்திணை என்பதெல்லாம் சரி என்றாலும், ஏன் அந்த நான்கு சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுள்ளன என்பதை இவ்விடைகள் விளக்கவில்லை அதனால் அவ்வ ள வு பொருத்தமில்லை.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 29

    திரிவெடி 29 (19/10/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   அரசன், நெருப்பு, மலர், கொடி, பசு இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 448

   Solution to Krypton 448  Yesterday's clue:   Friend  is French, in last sense,  a country (9)   Solution: PALESTINE = PAL + EST + IN +E PAL = friend EST = 'is' in French IN = in E = last sense Visit this page to see all the solutions received.

விடை 4314

  நேற்றைய வெடி: நடுப்பகுதி பஞ்சணை நடுப்பகுதி கட்டில் கால் தடை (5) அதற்கான விடை:    இடைஞ்சல் = இடை + ஞ்ச + ல் இடை = நடுப்பகுதி ஞ்ச = பஞ்சணை நடுப்பகுதி ல் = கட்டில் கால்    இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

உதிரிவெடி 4314

   உதிரிவெடி 4314 ( அக்டோபர் 13, 2024) வாஞ்சிநாதன் ****************** நடுப்பகுதி பஞ்சணை நடுப்பகுதி கட்டில் கால் தடை (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 448

    Krypton 448 (13th October  2024)  ****************** *** Friend  is French, in last sense,  a country (9)   SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 28 விடைகள்

   நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்: அட்ரியாடிக் கடல், காஸ்பியன் கடல்,  அரபிக்கடல்,  மத்தியதரைக்கடல்,  கருங்கடல்  இதில் தனியானது: காஸ்பியன் கடல் .  ஈரான் நாட்டுக்கு வடக்கில் ரஷ்யாவையொட்டி அமைந்த இக்கடல் எல்லா திசைகளிலும் நிலத்தால் சூழ‌ப்பட்டது. பெரிய ஏரி என்றும் கருதுகிறார்கள். (தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கான மொத்தமும் சேர்ந்த அளவுக்கு இருக்குமென்று சொல்கிறார்கள்). பொதுவாகக் கடல் நீரில் இருக்கும் உவர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறதாம்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

திரிவெடி 28

    திரிவெடி 28 (12/10/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   அட்ரியாடிக் கடல், காஸ்பியன் கடல்,  அரபிக்கடல்,  மத்தியதரைக்கடல்,  கருங்கடல் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4313

 நேற்று காலை வெளியான வெடி கப்பலை விட அகலம் ஆனால் இடமில்லை,  என்ன துன்பம்! (4) அதற்கான விடை :  அவலம் = அ+ வலம் அ = அகலம் ‍-கலம் வலம் = இடம்(இடது பக்கம்) இல்லை கலம் = கப்பல் "அகலம்" என்ற சொல்லில் "கலம்" (கப்பல்) என்ற பாகத்தை (விட்டு) விட "அ"   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 27 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: குற்றாலீஸ்வரர், கும்பேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், மருந்தீஸ்வரர், எறும்பீஸர்  அதற்கான விடை:  மருந்தீஸ்வரர் சிவாலயங்கள் ஒவ்வொன்றிலும் மூலவருக்குத் தனியான பெயருண்டு (ஆனால் வடிவம் என்னவோ அதே லிங்கம்தான்!) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து சொற்களும் ஐந்து வேறான சிவாலயங்களிலுள்ள சிவனின் பெயர்கள்தான். ஆனால் மருந்தீஸ்வரரைத் தவிர மற்றவை அக்கோவில் அமைந்துள்ள ஊருக்குப் பெயராகவும் அமைந்துள்ளன. குற்றாலீஸ்வரர்  ‍‍> குற்றாலம் கும்பேஸ்வரர் > கும்பகோணம் விருத்தகிரீஸ்வரர்  > விருத்தாசலம் எறும்பீஸர் > திருவெறும்பூர்(திருச்சிக்கு அருகில் உள்ள ஊர்) ஆனால் மருந்தீஸ்வரர் இருக்குமிடம் திருவான்மியூர்/சென்னை. சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், பத்மா, வானதி இம்மூவருக்கும் பாராட்டுகள் பஞ்ச சபை ஸ்தலங்கள் என்று குற்றாலத்தை மட்டும் தனியாகக் கருதலாம் என்று எஸ் ஆர் பாலசுப்ரமணியன் கூறுவது சரியென்றாலும் மற்ற நான்கையும் இணைக்கும் பொதுவான அம்சம் அவர் விடையில் இல்லையென்பதால் அதை ஏற்க முடிய‌வில்லை.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Krypton 447

      Krypton 447 (6th October, 2024)  ****************** Scattered cops return to contain violent raid (8)     Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4313

  உதிரிவெடி 4313 ( அக்டோபர் 6 , 2024) வாஞ்சிநாதன் *********************** கப்பலை விட அகலம் ஆனால் இடமில்லை,  என்ன துன்பம்! (4)   விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 27

  திரிவெடி 27 (05/10/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   குற்றாலீஸ்வரர், கும்பேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், மருந்தீஸ்வரர், எறும்பீஸ ர் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4312

  நேற்றைய வெடி: தெருக்கள் கூடுமிடத்தில்  அஷ்டமி நிலவோ? (3)   அதற்கான விடை:    சந்தி = சந்திரன் - ரன் சந்திரன் = என்பது 'முழு' நிலவு என்று கொண்டால் அஷ்டமியன்று பாதிக்குமேல் இருக்கும் நிலவு "சந்தி"! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

Krypton 446

    Krypton 446 (29th September  2024)  ****************** *** When it goes in to bleach (6)   SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4312

   உதிரிவெடி 4312  ( செப்டம்பர் 29, 2024) வாஞ்சிநாதன் ****************** தெருக்கள் கூடுமிடத்தில்  அஷ்டமி நிலவோ? (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 26 விடைகள்

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: பயறு, கேழ்வரகு, சாமை, சோளம், தினை இப்பட்டியலில் தனித்து நிற்பது "பயறு", அது மட்டுமே இருவிதையிலைகள் கொண்டது. மற்றவை ஒற்றை விதையிலைத் தாவரங்கள். மண்ணிலிருந்து ஓரங்குலம் வெளியே வரும்போதே இரட்டை இலைகளை விரித்துக் கொண்டு கடலை, பருப்பு, பயறு வகைகள் தோன்றுகின்றன.  நெல், சோளம், கோதுமை, சிறுதானியங்கள்  போன்றவை புல்வடிவில் வருகின்றன. தமிழ்நாட்டின் வேளாண்துறை வெளியிட்ட பயறு, தினை இவற்றின் படங்கள் கீழே: [இது உங்கள் விடைகளைக் காணும் முன்பு, புதிரிடும்போதே 26/9/2024 ல் எழுதப்பட்ட  பதிவு]     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 26

  திரிவெடி 26 (28/09/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?     பயறு, கேழ்வரகு, சாமை, சோளம், தினை  உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

Solution to Krypton 445

   Yesterday's clue: Occupant team occupies with charges for occupying  (8) Its solution:  RESIDENT =   SIDE + RENT SIDE = team RENT = charges for occupying Considering that most people got the solution fairly quickly (unlike the unpopular POPULAR last week) I guess this time the puzzle did not occupy your mind much! Meet you next Sunday EVENING at 6pm! Visit this page to see all the solutions received.

விடை 4311

   நேற்று காலை வெளியான வெடி அப்படியே இருக்கும் பாண்டியனே துளித் துளி சேர்த்துக் கொண்டது (3) அதற்கான விடை :  மாறாது = மாறா + து மாறன் = பாண்டியன் மாறா = பாண்டியனே சரியாகச் சொல்லப்போனால் பாண்டியா என்பதுதான் மாறா என்பதற்கு அதே எட்டாம் வேற்றுமையாக அமைந்துள்ளது.  ஆனாலும் பாண்டியனே என்பதும் விளிக்கும் வகை என்பதால் போனால்போகிறது என்று  ஒரு துளி வேற்றுமையுடன் சேர்த்துக் கொண்டேன். ‍‍‍‍ முக்கிய அறிவிப்பு : இனி பகல்பொழுது குறைந்து இரவு நீண்டதாக இருக்கும் என்பதால்  புதிர்கள்  சூரிய அஸ்தமனத்தையொட்டி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டு விடைகள் மறுநாள் மாலை வரும். இந்த ஆண்டின் கடைசிபுதிரிலிருந்து  மீண்டும் காலை நேரத்துக்குத் திரும்புவோம்   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

Krypton 445

      Krypton 445 (22nd September, 2024)  ******************   Occupant team occupies with charges for occupying  (8)      Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4311

    உதிரிவெடி 4311 ( செப்டம்பர் 22 , 2024) வாஞ்சிநாதன் ***********************   அப்படியே இருக்கும் பாண்டியனே துளித் துளி சேர்த்துக் கொண்டது (3)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solutions to Thirivedi 25 (English)

   Thirivedi 25 was an English puzzle instead of the usual Tamil one and I may occasionally do this again in future. The words given were: Glue, Frown, Preen, Bellow, Magnet   Four of them show their true colours when the first letter  is replaced suitably Glue --> Blue,  Frown-->Brown,   Preen --> Green,    Bellow --> Yellow So  Magnet is the exception, you can jumble it slightly and put an 'a' at end and make it Magenta, but that is not the same. Congratulations to those who deciphered it correctly. Here is the page with all the submitted answers.

பீட்டருக்கோர் திரிவெடி

  Thirivedi 25 (21/09/2024)  Vanchinathan    Find the word from among the five below that does not go along with the rest and  tell us why: Glue, Frown, Preen, Bellow, Magnet  Follow this link to post your solution. After this Equinox, (ie from 28th September onwards)  all Udhirivedi, Krypton and Thirivedi  will appear at  6pm IST for a few weeks. No need to get up early in the morning to solve these puzzles. Solution will also appear 24 hours later.

Solution to Krypton 444

   Solution to Krypton 444  Yesterday's clue:  In, up, upward, inside  arctic,  for example? (7) Solution: POPULAR =   POLAR + PU POLAR = Arctic PU  = UP (upward), IN = popular (trendy) Visit this page to see all the solutions received.

விடை 4310

   நேற்றைய வெடி: பாதி கணவன் முழு   கணவன் முழு மனித உருவல்லன் (4)   அதற்கான விடை:    கணபதி  = கண + பதி கண = பாதி கணவன் பதி = (முழு) கணவன் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

Krypton 444

    Krypton 444 (15th September  2024)  ******************   In, up, upward, inside  arctic,  for example? (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4310

   உதிரிவெடி 4310  ( செப்டம்பர் 15 , 2024) வாஞ்சிநாதன் ******** பாதி கணவன் முழு   கணவன் முழு மனித உருவல்லன் (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 24 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: அரசன்,  தலைவன்,  நாயகன்,  நடிகன்,  பாடகன் அதற்கான விடை: நடிகன் இந்த ஐந்தும் ஆண்பாலைக் குறிக்கும் சொற்களே என்றாலும், அதையொத்த பெண்பாற்சொல்லைக் காணும்போது வேறுபாடு தெரியும்:   அரசன்  --> அரசி தலைவன் --> தலைவி நாயகன் -->   நாயகி பாடகன் ---> பாடகி ஆனால், நடிகன் --->  நடிகை,   நடிகி அல்ல. ஏன் இந்த வேறுபாடு? இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்று நினைத்தபோது எனக்குத் தென்பட்டது இது: மாறும்  எழுத்துக்கு முந்தைய எழுத்து இகரத்தில் முடிந்தால், இன்னொரு இகரம் சேர்வது காதுக்கு இனிமையில்லை என்று தெரிகிறது. அதனால் ஆசிரியன் ‍‍> ஆசிரியை,   புத்தகப்பிரியன் ‍‍> புத்தகப்பிரியை. இன்று வெவ்வேரறு விடைகளைப் பலர் அளித்தாலும், இந்த ஆண்பால்/பெண்பால் விஷயத்தை கவனித்தவர்கள் பெண்களாக‌ மட்டுமே இருக்கிறார்கள்!     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 24

    திரிவெடி 24 (14/09/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?     அரசன்,  தலைவன்,  நாயகன்,  நடிகன்,  பாடகன்  உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

Solution to Krypton 443

   Yesterday's clue: Two relatives to the French after a brilliant success?! (6) Its solution:  COUPLE =   COUP + LE Couple = two relatives! COUP = brilliant  success LE = the French Visit this page to see all the solutions received.

விடை 4309

   நேற்று காலை வெளியான வெடி அலங்காரப் பிரியர்கள் விரும்புவது பண மாலை முடிப்பு (5) அதற்கான விடை : ஆபரணம் = ஆரம் + பண‌ ஆரம் = மாலை   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

உதிரிவெடி 4309

  உதிரிவெடி 4309 ( செப்டம்பர் 18 , 2024) வாஞ்சிநாதன் ***********************   அலங்காரப் பிரியர்கள் விரும்புவது பண மாலை முடிப்பு (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 23 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: காலை, சோலை, வேலை, வாலை, பாலை அதற்கான விடை: சோலை. மற்ற நான்கு பெயர்ச்சொற்களும் வேறொரு பெயர்ச்சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபான "ஐ" சேர்க்கப் பிறந்தவை. கால்‍‍  > காலை, வேல் > வேலை, வால் > வாலை பால் >  பாலை   எதற்கும் அஞ்சா வீரன் வேலை எறிந்து புலியைத் தாக்கி அதன் வாலை மிதித்துக் காலை ஒடுக்கிப்  பாலைக் கறந்து குடித்தான். பாலை நிலத்தில் வாலைக் குமரிக்கு  அதிகாலையிலேயே ஏகப்பட்ட வேலை.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 23

  திரிவெடி 23 (07/09/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  காலை, சோலை, வேலை, வாலை, பாலை   இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.  

விடை 4308

   நேற்றைய வெடி:   சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4)   அதற்கான விடை:    பார்வதி  = பாதி + ர்வ ர்வ‌ = பாதி கர்வம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.     நேற்றைய திரிவெடிக்கான நான் அளித்த  விடை பொருத்தமில்லை என்று குணா கருத்தளித்திருக்கிறார். அவருடைய ஆட்சேபணை சரியானதே என்பதை அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம், இதோ: திங்கள் மட்டுமே பூமியைச் சுற்றுகிறது என்பது பொருத்தமில்லாத விடை என நினைக்கிறேன்.ஏனெனில் செவ்வாய்,வியாழன் இரண்டும் (சூரியனிடமிருந்து கணக்கிடும்பொழுது) பூமியின் வெளி வட்டத்தில இருப்பதால் , அவை இரண்டும் சூரியனைச் சுற்றும்பொழுதே பூமியையும் சுற்றி விடுகின்றன. இன்னொரு விடையான சந்திரனைத் தவிர மற்ற நான்கு கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்திலும் நான் மாறுபடுகிறேன் ஏனெனில் சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. --- ( குணா)   நான் என்னுடைய விடையை சற்றே வேறுவிதமாக விளக்கியிருக்க வேண்டும் (பல வாசகர்கள் சரியாக விளக்கியதைப் போன்று): நாம் திங்கள் எனக்கூறும் வானவெளி வஸ்து அறிவியலில் பூமிய

Solution to Krypton 442

 Solution to Krypton 442  Yesterday's clue:   Part of a book, outer part,  reach out externally (7) Solution: CHAPTER =   PT + CHAER PT  = outer part CHAER  = reach out (anagram) Visit this page to see all the solutions received.

Krypton 442

  Krypton 442 (1st September  2024)  ******************   Part of a book, outer part,  reach out externally (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4308

   உதிரிவெடி 4308  ( செப்டம்பர் 1 , 2024) வாஞ்சிநாதன் ******** சென்றவாரம் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் புதிருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு புதிர் செய்து பாதிதான் திருப்திகரமாக இருந்தது. அரைமனதுடன் இருந்தேன், வெளியிடலாமா வேண்டாமா என்று. இப்படிப் பாதிப் பாதி நிலையில் முடிவெடுக்கக் கூடாது என்று கடைசி நிமிடத்தில் நிறுத்தி விட்டேன். ஆனால் இன்று பாதி, பாதி, பாதி திருப்திகரமாக  புதிர் செய்து விட்டேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோ அது: சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 22 விடைகள்

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன்  எல்லோரும் இதற்கான விடைகளை வானவியலிலிருந்து சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். திங்கள் மட்டும் பூமியைச் சுற்றிவருவது என்பதுதான் அது. அருள் அளித்திருக்கும் ஐந்து விடைகளும் வானவியலின் அடிப்படையில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு விடை சுவாரசியமாக இருக்கிறது.  ஆனால் நான் எதிர்பார்க்காத விடை, பத்மா அளித்திருப்பது. செவ்வாய்க் கிழமை மட்டும் கல்யாண முகூர்த்தம் இருக்காது என்பதும் பொருத்தமான விடையே. எல்லோருக்கும் பாராட்டுகள். விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திரிவெடி 22

  திரிவெடி 22 (31/08/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4307

   நேற்று காலை வெளியான வெடி   போரின்றி போட்டார் சேனை இடையில் உடுத்துவதற்கு உயர்ந்தது (4) அதற்கான விடை : பட்டாடை = படை + போட்டார் ‍-போர்   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

திரிவெடி 21 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   வேழம், திருமால், முழுமை,  மாவிலை,  சங்கு   வேழம் = வாரணம் திருமால் = நாரணன் முழுமை = பூரணம் மாவிலை = தோரணம் (??) இந்த நான்கும் முதல் சொற்களாக‌ எதுகையாக ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடலொன்றின் நான்குவரிகளில் உள்ளன. கிட்டதட்ட இரண்டுமாதத்தில்  புது இசைவடிவில் வெளியானதிலிருந்து நூறுமுறைக்கு மேல் இப்பாடலைக் கேட்டுவிட்டேன்/பார்த்துவிட்டேன். அது  ஒலித்துக்கொண்டிருக்கும்போது செய்த வெடி. வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.     அதனால் இவற்றோட ஒட்டாத சொல் சங்கு. ஆனாலும் இப்பபாடலை முழுதாகப் படித்தால் ஆண்டாள் வெண்சங்கிடம் என்ன கேட்கிறாள் என்று அறிந்து அதன் சூட்சுமத்தைப் புரிந்தால் வியந்துபோவீர்கள். இங்கே இசையாகக் கேட்கலாம். இங்கே பரத‌நாட்டியத்துடன் காணலாம்.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4307

    உதிரிவெடி 4307 ( ஆகஸ்டு 18 , 2024) வாஞ்சிநாதன் ************************    போரின்றி போட்டார் சேனை இடையில் உடுத்துவதற்கு உயர்ந்தது (4)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்    

திரிவெடி 21

  திரிவெடி 21 (17/08/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  வேழம், திருமால், முழுமை,  மாவிலை,  சங்கு இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.  

விடை 4306

     நேற்றைய வெடி: கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5) அதற்கான விடை:    வல்லினம் = வல்லி + னம் வல்லி = கொடி (புஷ்பலதா = புஷ்பவல்லி = மலர்க்கொடி)  னம்  = மானம் ‍- மா  (மா = பெருமை)  கடினமான இப்புதிருக்கு விடையளித்த அனைவருக்கும் பாராட்டுகள். பிரசாத் வேணுபோபால் விடையோடு வெண்பாவை எழுதியுள்ளார். அதனால் நானும் ஒன்று எழுதுகிறேன்: பகட்டான சொல்லழகைப் பார்த்துநீர் தந்த‌ திகட்டா விடையின் சிறப்பை  நுகர்ந்து கொடியேந்திப் பாராட்டிச் சொல்வேன் உதிரி வெடியில்நீர் வேந்தரென நின்று.   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 440

   Solution to Krypton 438  Yesterday's clue A weapon to tear apart a  shelter and liberate (3) Solution: RID =   TRIDENT - TENT Trident  = a weapon TENT  =  shelter rid (verb) =  Liberate Visit this page to see all the solutions received.

Krypton 440

    Krypton 440 (11th August  2024)  ******************     A weapon to tear apart a  shelter and liberate (3)  SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 20 விடைகள்

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: சந்தானம், விஜய், ஜெயம், கஜம், ஆதி     என்னுடைய கணிப்பில் சேராதது, ஜெயம் . அஷ்ட லக்ஷ்மிகளில் நான்கை மற்ற சொற்கள் குறிக்கும்: "சந்தான லக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆதி லக்ஷ்மி". விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 20

  திரிவெடி 20 (10/08/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   சந்தானம், விஜய், ஜெயம், கஜம், ஆதி உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

Solution to Krypton 439

   Yesterday's clue: Fleeting sign of initial times  Madonna carried (9) Its solution:  MOMENTARY =   MARY + OMEN + T Mary  =  Madonna OMEN = sign T = initial times Visit this page to see all the solutions received.

விடை 4305

   நேற்று காலை வெளியான வெடி உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5) அதற்கான விடை :  கட்டியம் = கட்டிய + ம் கட்டிய = உடுத்திய‌ ம் = கடைசி நிமிடம்   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.    திரிவெடி 19ல் உத்தரப்பிரதேசம்தான் சரி, உத்திரப் பிரதேசம் சரியல்ல என்று குணசேகரன் கருத்துரையில் கூறியுள்ளார்.  ஹிந்தி உச்சரிப்பின் படி கூறுகிறார்.  எது சரியென்று நான் அறிய முற்படவில்லை.  "உத்தர்" என்று இப்போது நான் கண்டு பிடித்தேன். "ர்",  என்பது   ர ஆவதும் "த" என்பது "தி" என்று ஆனதும் தமிழ்சொல் போல் ஒலிக்கிறது. சாவித்ரி/சாவித்திரி, பத்ரிகை/பத்திரிகை, த்ராக்ஷை/திராட்சை என்று தமிழ்ப்படுத்தும் பொதுவான விதி இருப்பதால் இது பரவலாகிவிட்டது என்று நினைக்கிறேன்.  

Krypton 439

    Krypton 439 (4th August, 2024)  ****************** Fleeting sign of initial times  Madonna carried (9) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4305

    உதிரிவெடி 4305 ( ஆகஸ்டு 4 , 2024) வாஞ்சிநாதன் ************************ உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 19 விடைகள்

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:     புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா    திரிபு உத்தி, மத்தி, அருணா இவை நான்கும் சொல்லாகவோ பெயராகவோ இருந்தாலும், அவை  மாநிலங்களின் பெயர்களின் முதல் மூன்று எழுத்துகள் கூட: திரிபுரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் அருணாசலம் இவ்விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், ஆர் பத்மா, வானதி  இருவருக்கும்   மூவருக்கும் பாராட்டுகள். "திரிபு" மட்டும் தமிழ்ச் சொல் மற்றவை சமஸ்கிருதம் (அம்பிகா) "அருணா"வில் மட்டும் "தி" என்ற எழுத்து இல்லை (முத்துசுப்ரமணியம், அம்பிகா) என்ற விடைகளும் நான்  எதிர்பார்க்காத  ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்கள் கொண்ட விடைகள். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 19

  திரிவெடி 19 (03/08/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 438

 Solution to Krypton 438  Yesterday's clue Commonplace lock locks up central funds (7) Solution: MUNDANE =   MANE + UND MANE  = Lock (of hair) UND  = (f) und (s) As I'd commented earlier, the idea for this arose while reading  the  criticism of  the recently presented budget not releasing funds for Tamilnadu  from the centre .   Visit this page to see all the solutions received.

விடை 4304

   நேற்றைய வெடி:   காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5) அதற்கான விடை:  புரோ வியப்படை =  கா வியப் படை ப்பில் பொதிந்தது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 438

    Krypton 438 (28th  July 2024)  ******************   Commonplace lock locks up central funds (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 18 விடை

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: சித்திரை,  ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி    என்னுடைய கணிப்பில் சேராதது, ஐப்பசி . மற்ற நான்கு மாதங்களிலும் பௌர்ணமி விசேஷமானது. சில ஊர்களில் பெருந்திரளாக பக்த லட்சங்கள் திரள்வார்கள். சித்திரைப் பௌர்ணமியில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருநாள். கார்த்திகைப் பௌர்ணமியில்  திருவண்ணாமலையில் தீபம். தை மாதம் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி;  தைப்பூசம் என்று முருகன் கோவில் பால்குடம் அலகு குத்துவது என்று விசேஷம். பழனி, சிங்கப்பூர், மலேஷியா என்று பல இடங்களில்.   (நான்கைந்து ஆண்டுகளுக்கும் முன்பு அது தமிழக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது). மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி, கும்பகோணத்தில் கொண்டாட்டம். (பன்னிரண்டாண்டுக்கு ஒரு முறை அது மகாமகம்). ஐப்பசியில் அமாவாசைதான் (வட இந்தியாவில்) தீபாவளி; பௌர்ணமி எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்படி ஏதும் விசேஷம் என்று இருந்தால் அறிந்தவர்கள் கூறவும். (பக்திப் பத்திரிகைகள், ஜோதிடப் பத்திரிகைகளைப் படித்தால் எல்லா நாளும் விசேஷம் என்று தோன்றும். அதைத் தள்ளிவிடுவோம்). வேறு விடைகளும் சில வித்தியாசமான பார்வ

உதிரிவெடி 4304

 உதிரிவெடி 4304 ( ஜூலை  28, 2024) வாஞ்சிநாதன் ************************* காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 18

  திரிவெடி 18 (27/07/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    சித்திரை, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

Solution to Krypton 437

   Yesterday's clue: The enclosure traps our spirit (7) Its solution:  COURAGE =   CAGE + OUR Cage = Enclosure 'Our' trapped inside cage Courage = spirit Visit this page to see all the solutions received.

விடை 4303

   நேற்று காலை வெளியான வெடி அரை வருடம் முன்பே வந்த வீக்கம் கல், கம்பிகளால் ஆனது  (5)    அதற்கான விடை :  கட்டிடம்  = கட்டி +  (வரு) டம் கட்டி = வீக்கம் டம் = அரை   வரு|டம் கட்டிடம் = கல், (இரும்புக்) கம்பிகள் வைத்துக் கட்டப்படுவது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 437

    Krypton 437 (21st July, 2024)  ****************** The enclosure traps our spirit (7) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4303

    உதிரிவெடி 4303 (ஜூலை 21 , 2024) வாஞ்சிநாதன் ************************    அரை வருடம் முன்பே வந்த வீக்கம் கல், கம்பிகளால் ஆனது  (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 17 விடைகள்

  பல வருடங்களாக உதிரிவெடியில் பங்கேற்ற பலரைப் பற்றித் தெரியாத ஒன்றை இப்போது 3 மாதங்களாகத் திரிவெடி மூலம்   தெரிந்து கொண்டேன். இங்கே விடையளிப்பவர்களை ஒரு பட்டிமன்றம் தொடங்கும் ஒரு நிமிடம் முன்பு  பாரதி பாஸ்கர் கட்சியோ, ராஜா கட்சியோ எதில் சேரச் சொன்னாலும்  அந்த அணிக்கான வாதங்களைப் பொருத்தமாக  முன் வைக்கும் திறமை உள்ளவர்கள் என்பதுதான் அது. ஒருவரே லட்டுக்கு எதிராகவும், களிக்கு எதிராகவும் இன்று காரணங்களை முன் வைத்திருப்பது போல் முந்தைய திரிவெடிக்கும் காரணங்களை அளித்திருக்கின்றனர்.   சுவாரசியமாக இருக்கிறது.  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   முறுக்கு,  அதிரசம்,  களி,  சீடை,  லட்டு   இதற்கு என்னுடைய  அறிவுக்குத் தெரிந்தது.  லட்டு -- அது மட்டும் கடலை மாவில் செய்யப்படுவது, மற்றவை அரிசி மாவில் தயாரிக்கப்படுபவை. பிற பொருத்தமான விடைகள் நான் குறிப்பிட விரும்புவது: களி மட்டும் ஒரு ஸ்திரமான உருவில்லாதது, மற்றவை தெளிவான உருவத்தால் எண்ணிக் குறிப்பிடக் கூடியவை. களிக்கு மற்றொரு வித்தியாசம்: மற்றவை எல்லாம் எண்ணெயில் பொரிக்கப்படுபவை, களி மட்டும் கிண்டப்படுவது. நீங்கள் அளிக்கும் இந்த விடைகளைப் பார்

திரிவெடி 17

  திரிவெடி 17 (20/07/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. முறுக்கு,  அதிரசம்,  களி,  சீடை,  லட்டு இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 436

   Yesterday's clue A sign to revoke  when switching sides (6) Solution: CANCER   =  a zodiac sign CANCER  = CANCEL -L + R Cancel = revoke L, R = (left, right) sides Visit this page to see all the solutions received.

விடை 4302

   நேற்றைய வெடி:  செடிகள் மண்டிய இடத்தில் வியாதிக்காரனைப் புதைத்துக் கல்யாணம் செய்து வைப்பவர் (5) அதற்கான விடை:  புரோகிதர் = புதர் + ரோகி புதர் = செடிகள் மண்டியுள்ள இடம் ரோகி = வியாதியுள்ளவன் ( ரோகம் = வியாதி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 436

  Krypton 436 (14th  July 2024)  ******************   A sign to revoke  when switching sides (6) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4302

   உதிரிவெடி 4302 ( ஜூலை  14, 2024) வாஞ்சிநாதன் ************************* செடிகள் மண்டிய இடத்தில் வியாதிக்காரனைப் புதைத்துக் கல்யாணம் செய்து வைப்பவர் (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 16 விடை

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்களும் "வை" என்ற எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்கள். கோவை, சால்வை, பார்வை, போர்வை , பாவை   என்னுடைய கணிப்பில் தனித்து நிற்பது "பார்வை". அந்த இறுதி எழுத்தை நீக்க,  ஐந்து சொற்களும் மீண்டும் பொருள் தரும்,   கோ ‍‍= அரசன், தெய்வம் சால் = ஏற்றத்தில் கட்டப்படும் நீரை அள்ளும் கலன் பார் = கண்ணால் நோக்கு போர் = யுத்தம் பா = செய்யுள் கவனித்துப் பார்த்தால் பார்வை என்பது மட்டும் பார் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெரிகிறது. மற்றவற்றில் "வை" நீக்கப் பெறப்படும் சொல்லும், கொடுத்த சொல்லும் தொடர்பில்லாதவை.  அருள், பார்த்தசாரதி இருவரும் இதற்கு நெருக்கமான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.   விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திரிவெடி 16

  திரிவெடி 16 (13/07/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?     கோவை, சால்வை, பார்வை, போர்வை , பாவை உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

விடை 4301

 நேற்று காலை வெளியான வெடி கடலூர் தந்த உயர்ந்த துணி வகையறா ? (5)    அதற்கான விடை :  பட்டினம் = பட்டு + இனம் பட்டு  = உயர்ந்த துணி இனம் = வகையறா பட்டினம் = கடலோரங்களில் அமைந்த ஊர். (நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம், காயல்பட்டினம், மசூலிப்பட்டினம்)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 435

    Krypton 435 (25th July, 2024)  ****************** Wet part almost rebuilt with ceiling  does not  leak (10) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4301

    உதிரிவெடி 4301 (ஜூலை 7 , 2024) வாஞ்சிநாதன் ************************    கடலூர் தந்த உயர்ந்த துணி வகையறா ? (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 15 விடை

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: முத்திரை, ஓசை,  சபதம்,  காதலி, செல்வன்  இதில் முத்திரையைத் தவிர மற்ற நான்கும் கல்கியின் கதைத் தலைப்பின் இரண்டாம் சொல்லாகும்: அலை ஓசை,  சிவகாமியின் சபதம்,  கள்வனின் காதலி, பொன்னியின் செல்வன். அருள் இதே விடையைக் கண்டுபிடித்துவிட்டு, நாவல்களின் தலைப்பென்ன, திரைப்படப் பெயர்கள் அடிப்படையில்  செல்வன் தனித்து நிற்கிறது என்ற விடையும் கூடுதலாக அளித்திருக்கிறார். விடைகண்ட அனைவருக்கும் பாராட்டுகள். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 15

  திரிவெடி 15 (06/07/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. முத்திரை, ஓசை,  சபதம்,  காதலி, செல்வன் இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 434

   Yesterday's clue Anticipate the charge for services including a form of rose (7)   Solution: FORESEE = FEE + ORES FEE = charge for services ORES = form of rose Visit this page to see all the solutions received.

விடை 4300

   நேற்றைய வெடி:   தலை சீவிய சிவப்புக் காளை போராட்டம் கன்னிப் பெண்ணுக்கு ஏற்ற  நிகழ்ச்சியல்ல   (5) அதற்கான விடை:  வளைகாப்பு = சிவப்பு ‍- சி + காளை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4300

   உதிரிவெடி 4300 ( ஜூலை  1, 2024) வாஞ்சிநாதன் *************************   தலை சீவிய சிவப்புக் காளை போராட்டம் கன்னிப் பெண்ணுக்கு ஏற்ற  நிகழ்ச்சியல்ல (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 434

  Krypton 434 (1st July 2024)  ******************   Anticipate the charge for services including a form of rose (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 14 விடை

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்தும் சுஜாதவின் நாவல்களின் தலைப்புகள். கொலையுதிர் காலம்,  மேகத்தைத் துரத்தியவன், நைலான் கயிறு,  கனவுத் தொழிற்சாலை, நில்லுங்கள் ராஜாவே அதில் தனித்து நிற்பது, கனவுத் தொழிற்சாலை . அது திரைப்படத் துறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கதை. மற்ற நான்கும் வழக்கறிஞர் கணேஷ், கொலை மர்மத்தைக் கண்டுபிடிக்கும்  கதைகள். வசந்தும் இடம்பெறும் கதை என்று நேற்றே விடையை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அருள், அகிலா ஸ்ரீதரன் விடைகளில் முதல் கதையான நைலான் கயிற்றில் கணேஷ் மட்டும்தான் வருவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதால் கணேஷ் பெயரை மட்டும் இப்போது சொல்கிறேன். மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.   விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திரிவெடி 14

  திரிவெடி 14 (29/06/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில் எந்த நான்கு எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   கொலையுதிர் காலம்,  மேகத்தைத் துரத்தியவன், நைலான் கயிறு,  கனவுத் தொழிற்சாலை, நில்லுங்கள் ராஜாவே உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்

திரிவெடி 13 விடைகள்

  நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல்   சோறு தான் மற்றதோடு சேராதது. மற்ற சொற்களின் தொடக்கத்தில் ஈ (ஈரம்), தா (தாகம்), கொடு (கொடுமை), அளி (அளிதல்) என்ற சொற்கள் வருகின்றன. அவையெல்லாம் கிட்டதட்ட "வழங்கு" என்ற ஒரே பொருளுடையவை. ஈ  என்பது தானமாக வழங்குவது, தா என்பது ஒருவருக்குச் சம நிலையிலுள்ளவருக்கு வழங்குவது என்பது போல் சிறிய வேறுபாடுகள் உள்ளன. சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். இதெல்லாம் அநியாயம், என்று என்னைத் திட்ட விரும்புபவர்கள் நியூ யார்க் டைம்ஸ் புதிராசிரிரையும் சேர்த்துத் திட்டவும். அங்கே கையாண்ட அதே உத்தியைத்தான் தமிழில் பயன்படுத்தியுள்ளேன்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

விடை 4299

   நேற்று காலை வெளியான வெடி குதிரையிடம் குறுகி முன்னே பசு, நந்தி இருக்குமிடம்   (4) அதற்கான விடை : ஆலயம் = ஆ + லாயம் ‍‍---> ஆ+லயம் லாயம் (குதிரைகள் இருக்கின்ற இடம்),  குறுக 'லயம்'. ஆலயம் = நந்தி இருக்கின்ற இடம் (ஏன் பெருமாள் கோயிலில் நந்தி இருக்காதே, அது ஆலயமாகாதா என்று வாதிட விரும்புவர்கள் என்னை விட்டுவிட்டு இளையராஜாவின் திவ்ய பாசுரம் இசை வெளியீட்டுக்கு கிருஷ்ணகான சபாவுக்குச் செல்லுங்கள்)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4299

    உதிரிவெடி 4299 (ஜூ ன் 23 , 2024) வாஞ்சிநாதன் ************************ குதிரையிடம் குறுகி முன்னே பசு, நந்தி இருக்குமிடம் (4)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்   நேற்றைய திரிவெடிக்கு 10 விடைகள் வந்துள்ளன. இதில் ஜோசப் அமிர்தராஜ், ராம்கி கிருஷ்ணன், அருள் (முத‌ல் விடை) இவர்களின் விடைகள்  சரியானவை. இன்னும் ஒரு நாள் முயலுங்கள்.  

Krypton 433

    Krypton 433 (23rd June, 2024)  ****************** An animal with unknown information vital to life (6) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

திரிவெடி 13

  திரிவெடி 13 (22/06/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஆறு சொற்கள் உள்ளன. இதில் விலக்க வேண்டிய இரண்டு சொற்களில் ஒன்றை நானே சொல்லிவிடுகிறேன். இது வெறும் சொல் விளையாட்டுதான், பொது அறிவுச் சோதனை இவ்வாரப் புதிரில் இல்லை. தாகத்தால் ஈரமான அளிந்த சோற்றை  உண்ணும் கொடுமை. சும்மா,  எனக்கு ஒரு பொழுது போக்கிற்காக ஒரு வாக்கிய வடிவில் எழுதியுள்ளேன். வழக்கமான சொற்பட்டியல் வடிவில் (மேலேயிருப்பதில் ஒரு சொல்லை நீக்கிய பின்) ஐந்து சொற்கள் இதோ: ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல் இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4298

 நேற்றைய வெடி: தெய்வத்தின் முன் கம்பின் முனை சீவி  ஒரு தானியத்தில் கல்லைப் புரட்டுவது (5) அதற்கான விடை:  நெம்புகோல் = நெல் + கம்பு-க + கோ நெல் = ஒரு தானியம் கோ = தெய்வம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

திரிவெடி 12 விடைகள்

   நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள்: நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல் விடைகள் இம்முறையும் வேறு சில கோணங்களில் வந்துள்ளன. நான் அமைத்தபோது கொண்ட க‌ருத்தின்படி சேராதது, அயோத்தி . மற்ற சொற்கள் எல்லாவற்றையும் ஐந்தில் ஒன்று என்று அறியலாம். நகுலன், பஞ்சபாண்டவரில் ஒருவன். பிரான்ஸ, ஐ.நா. சபையின் ஐந்து வல்லரசு நாடுகளில் ஒன்று. நெருப்பு, பஞ்சபூதங்களில் ஒன்று. மோதிரவிரல், ஐந்து விரல்களில் ஒன்று. அருள், அகிலா ஸ்ரீதரன், எஸ் பார்த்தசாரதி இவர்கள் மூவரும் ஒருபடி மேலே சென்று இச்சொற்கள் ஐந்தில் நான்காவது இடத்தில் வருபவை என்கிறார்கள். அது உண்மையென்றால், நன்றி! பஞ்சபூதத்தின் வரிசையும் கால்பந்தாட்ட அணிகளின் வரிசையும்  இன்றுவரை நான் அறியாதவை. விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Solution to Krypton 432

 Yesterday's clue Thing could be the alternative to an initial aversion (7) Solution: ARTICLE = thing.  Article (in grammar) could be "the", alternatively "an" , or the first letter of aversion("a") Visit this page to see all the solutions received.

உதிரிவெடி 4298

   உதிரிவெடி 4298 ( ஜூன் 16, 2024) வாஞ்சிநாதன் *************************   தெய்வத்தின் முன் கம்பின் முனை சீவி  ஒரு தானியத்தில் கல்லைப் புரட்டுவது (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்   திரிவெடிக்கு இது வரை ஆறுவிடைகள் வந்துள்ளன. விடைகள் ஆறாய்ப் பெருகியோட நாளை காலை வரை அவகாசம் இருக்கிறது.  முயலுங்கள்.

Krypton 432

  Krypton 432 (16th  June 2024)  ******************   Thing could be the alternative to an initial aversion (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 12

  திரிவெடி 12 (15/06/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல்  உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்