நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
குறவர், கறி, அறம், உறி, எருக்கு
அதற்கான விடை: எருக்கு, மற்றவற்றுடன் சேராத சொல்.
மற்ற சொற்களில் றகரம்/ரகரம் மாற்றப்படும்போது பொருள் தரும் சொற்கள் கிடைக்கும்.
கறி: கரி
அறம்: அரம்
உறி: உரி
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
எடுத்த குறவர் எனும்சொல் - கொடுக்கும்
எழுத்துக்கள் நான்கில் இறுதியில் உள்ள
எழுத்தினை மாற்றவில்லை ஏன் ?
தந்த விளக்கம் தனையேற்றால் மாற்றத்தை
அந்த எழுத்துக்கும் அல்லவோ - தந்திட
வேண்டும் எனும்என் வினாவுக்குக் கூறிட
வேணடும் பொருந்தும் விடை
மாற்றம் புரிந்தால் வரும்சொல் குரவற்தான்
ஏற்றிடார் யாருமே அச்சொல்லை -ஏற்றமிகு
இப்பகுதி கொள்ளவேண்டும் இன்னும் சிறப்பென்றே
செப்பினேன் , சிந்திப்பீர் சற்று