Skip to main content

திரிவெடி 38 அதிகக் குறிப்புகளுடன்

 

 திரிவெடி 38 (21/12/2024) 

 வாஞ்சிநாதன் 


பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது? 

சொர்கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம்

உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 


இதற்கு அனுப்பப்பட்ட எட்டு விடைகளும்  சரியானதாக இல்லை. அதனால்
 தாரம் என்பது மனைவியைக் குறிக்கவில்லை என்பதையும் சில வாரங்கள் முன்பு வந்த‌
புதிரின் அடிப்படையிலேயே
இதுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும்  நினைவில் கொண்டு  மீண்டும் முயலுங்கள்.


விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.

 

அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)

Comments

GUNA said…
நீங்கள் மனதில் நினைத்ததைத்தான்  சொல்லவேண்டும்
நாங்கள் எனநினைத்தல் நீதியா -  பாங்காய்ப்
பொருந்தும் விடையெதுவும் பாராட்டி ஏற்கப்
பொருந்தும் விடைதானென் பேன்


சரியில்லை என்னும்சொல் சொல்லல் சிறிதும்
சரியில்லை  என்றிடுவேன்,சற்றே -பரிவுடன்
என்னறிவில்  தோன்றியவை இவ்விடைகள் அல்லவெனல்
நன்றென்று சொல்லுவேன் நான்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.