அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை 7 மணிக்கு!
ராமானுஜன் பிறந்தநாளான நேற்று வெளியான வெடி:
இரு ஸ்வரங்களோடு ராமானுஜன் கடைசி இன்னலுடன் கணிதத்தில் கையாள்வது (5)
இதற்கான விடை: சமன்பாடு = ச + ம + ன் + பாடு
ச, ம = இரு ஸ்வரங்கள்
ன் = (ராமனுஜ)ன்
பாடு = இன்னல்
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
ராபர்ட் கனிகல் எழுதிய ராமனுஜனின் சரிதையான The Man Who Knew Infinity இன் தமிழாக்கத்தைப் படிக்க நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனத்தின் அல்லது பிற விற்பனையாளர்களின் வலைப்பக்கம் சென்று தேடவும் (அதை நான் மொழிபெயர்த்து 11 வருடங்கள் ஆகி
விட்டதால், இப்போது எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை).
காவிரி யாற்றின் கரையூர் இளைஞன்
ஏவிய கேள்விக் கணைகள் யாவும்
ஆவியை உலுக்க அறிஞர் திணறிடும்
தாவிப் பாய்ந்திடும் அறிவின் வீச்சாம்
நாவினில் எழுதினாள் நாமகிரித் தாயென
சேவித் துரைத்த சீரியோன் சரிதை
தூவிய நிகழ்ச்சித் தொகுப்பென இன்றிக்
காவியச் சுவையொடு கதையாய்க் கோத்து
மேலை நாட்டோர் மெச்சிடச் செய்த
நூலைத் தமிழில் நுகர்வோம் வாரீர்
காவிரி யாற்றின் கரையூர் இளைஞன்
ஏவிய கேள்விக் கணைகள் யாவும்
ஆவியை உலுக்க அறிஞர் திணறிடும்
தாவிப் பாய்ந்திடும் அறிவின் வீச்சாம்
நாவினில் எழுதினாள் நாமகிரித் தாயென
சேவித் துரைத்த சீரியோன் சரிதை
தூவிய நிகழ்ச்சித் தொகுப்பென இன்றிக்
காவியச் சுவையொடு கதையாய்க் கோத்து
மேலை நாட்டோர் மெச்சிடச் செய்த
நூலைத் தமிழில் நுகர்வோம் வாரீர்
Comments