நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்
சொர்க்கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம்
இதில் தனித்திருப்பது கிழக்கு.
மற்றவையெல்லாம் ஏழு, ஏழாக அறியப்படும் தொகுப்பிலிருப்பவை.
மஞ்சள் = வானவில்லின் ஏழு வண்ணங்களிலொன்று
விலங்கு = ஏழு பிறவிகளில் ஒன்று (மற்றவை: தாவரம், ஊர்வன, மீனினம், பறவை, மனிதர், தேவர்)
தாரம் = தமிழிசையில் ஏழு சுரங்களில் ஒன்று (மற்றவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி)
சொர்க்கம் = மேலுலகங்கள் ஏழில் ஒன்று, (மற்ற ஆறின் பெயர்கள் எனக்கு நினைவிலில்லை)
விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், அருள் இருவருக்கும் பாராட்டுகள்!
இனிவரும் வாரங்களில் புதிர்கள் காலை 7 மணிக்கு வெளிவரும்
Comments