Skip to main content

திரிவெடி 26 விடைகள்

 

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

பயறு, கேழ்வரகு, சாமை, சோளம், தினை

இப்பட்டியலில் தனித்து நிற்பது "பயறு", அது மட்டுமே இருவிதையிலைகள் கொண்டது. மற்றவை ஒற்றை விதையிலைத் தாவரங்கள். மண்ணிலிருந்து ஓரங்குலம் வெளியே வரும்போதே இரட்டை இலைகளை விரித்துக் கொண்டு கடலை, பருப்பு, பயறு வகைகள் தோன்றுகின்றன.  நெல், சோளம், கோதுமை, சிறுதானியங்கள்  போன்றவை புல்வடிவில் வருகின்றன.

தமிழ்நாட்டின் வேளாண்துறை வெளியிட்ட பயறு, தினை இவற்றின் படங்கள் கீழே:







[இது உங்கள் விடைகளைக் காணும் முன்பு, புதிரிடும்போதே 26/9/2024ல் எழுதப்பட்ட  பதிவு]

 
 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments