நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
அரசன், தலைவன், நாயகன், நடிகன், பாடகன்
அதற்கான விடை: நடிகன்இந்த ஐந்தும் ஆண்பாலைக் குறிக்கும் சொற்களே என்றாலும், அதையொத்த பெண்பாற்சொல்லைக் காணும்போது வேறுபாடு தெரியும்:
அரசன் --> அரசி
தலைவன் --> தலைவி
நாயகன் --> நாயகி
பாடகன் ---> பாடகி
ஆனால், நடிகன் ---> நடிகை, நடிகி அல்ல.
தலைவன் --> தலைவி
நாயகன் --> நாயகி
பாடகன் ---> பாடகி
ஆனால், நடிகன் ---> நடிகை, நடிகி அல்ல.
ஏன் இந்த வேறுபாடு? இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்று நினைத்தபோது எனக்குத் தென்பட்டது இது: மாறும் எழுத்துக்கு முந்தைய எழுத்து இகரத்தில் முடிந்தால், இன்னொரு இகரம் சேர்வது காதுக்கு இனிமையில்லை என்று தெரிகிறது.
அதனால் ஆசிரியன் > ஆசிரியை, புத்தகப்பிரியன் > புத்தகப்பிரியை.
இன்று வெவ்வேரறு விடைகளைப் பலர் அளித்தாலும், இந்த ஆண்பால்/பெண்பால் விஷயத்தை கவனித்தவர்கள் பெண்களாக மட்டுமே இருக்கிறார்கள்!
அதனால் ஆசிரியன் > ஆசிரியை, புத்தகப்பிரியன் > புத்தகப்பிரியை.
இன்று வெவ்வேரறு விடைகளைப் பலர் அளித்தாலும், இந்த ஆண்பால்/பெண்பால் விஷயத்தை கவனித்தவர்கள் பெண்களாக மட்டுமே இருக்கிறார்கள்!
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
புரிதல் இலாத பதிவால் - பெரிதும்
திகைத்தேன் சிறிதுநேரம் சென்றதும் நன்றாய்
நகைத்தேன் நினைத்து நினைத்து.