உதிரிவெடி 4308
(செப்டம்பர் 1, 2024)
வாஞ்சிநாதன்
********
சென்றவாரம் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் புதிருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு புதிர் செய்து பாதிதான் திருப்திகரமாக இருந்தது. அரைமனதுடன் இருந்தேன், வெளியிடலாமா வேண்டாமா என்று. இப்படிப் பாதிப் பாதி நிலையில் முடிவெடுக்கக் கூடாது என்று கடைசி நிமிடத்தில் நிறுத்தி விட்டேன். ஆனால் இன்று பாதி, பாதி, பாதி திருப்திகரமாக புதிர் செய்து விட்டேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோ அது:
சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4)
விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments