Skip to main content

திரிவெடி 23 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

காலை, சோலை, வேலை, வாலை, பாலை

அதற்கான விடை: சோலை.
மற்ற நான்கு பெயர்ச்சொற்களும் வேறொரு பெயர்ச்சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபான "ஐ" சேர்க்கப் பிறந்தவை.
கால்‍‍  > காலை,
வேல் > வேலை,
வால் > வாலை
பால் >  பாலை
 
எதற்கும் அஞ்சா வீரன் வேலை எறிந்து புலியைத் தாக்கி அதன் வாலை மிதித்துக் காலை ஒடுக்கிப்
 பாலைக் கறந்து குடித்தான்.

பாலை நிலத்தில் வாலைக் குமரிக்கு  அதிகாலையிலேயே ஏகப்பட்ட வேலை.
 
 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…

பாரதியார் பாடல்களில் வேலை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்ற கருத்தைக் கண்டேன். எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பாரதியார் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்றை மட்டும் இங்கு தருகிறேன்.

மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடலின் எட்டாம் கண்ணியைப் பார்க்கவும்


#1

தொண்டு செய்யும் அடிமை உனக்கு
சுதந்திர நினைவோடா
பண்டு கண்டது உண்டோ அதற்குப்
பாத்திரம் ஆவாயோ

#2
ஜாதிச் சண்டை போச்சோ உங்கள்
சமயச் சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண் முன்
நிற்கொணாது போடா

#3
அச்சம் நீங்கினாயோ அடிமை
ஆண்மை தாங்கினாயோ
பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

#4
கப்பல் ஏறுவாயோ அடிமை
கடலைத் தாண்டுவாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை
கொற்றத் தவிசும் உண்டோ

#5
ஒற்றுமை பயின்றாயோ அடிமை
உடம்பில் வலிமை உண்டோ
வெற்றுரை பேசாதே அடிமை
வீரியம் அறிவாயோ

#6
சேர்ந்து வாழுவீரோ உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ

#7
வெள்ளை நிறத்தைக் கண்டால் பதறி
வெருவலை ஒழித்தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கு இல்லை மறந்திடடா

#8
நாடு காப்பதற்கே உனக்கு
ஞானம் சிறிதும் உண்டோ
வீடு காக்கப் போடா அடிமை
வேலை செய்யப் போடா

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்