நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்:
புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன்
எல்லோரும் இதற்கான விடைகளை வானவியலிலிருந்து சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். திங்கள் மட்டும் பூமியைச் சுற்றிவருவது என்பதுதான் அது. அருள் அளித்திருக்கும் ஐந்து விடைகளும் வானவியலின் அடிப்படையில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு விடை சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் நான் எதிர்பார்க்காத விடை, பத்மா அளித்திருப்பது. செவ்வாய்க் கிழமை மட்டும் கல்யாண முகூர்த்தம் இருக்காது என்பதும் பொருத்தமான விடையே.
எல்லோருக்கும் பாராட்டுகள்.
விடையளித்தோர் விவரத்தைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments
திங்கள் மட்டுமே பூமியைச் சுற்றுகிறது என்பது பொருத்தமில்லாத விடை என நினைக்கிறேன்.ஏனெனில் செவ்வாய்,வியாழன் இரண்டும் (சூரியனிடமிருந்து கணக்கிடும்பொழுது) பூமியின் வெளி வட்டத்தில இருப்பதால் , அவை இரண்டும் சூரியனைச் சுற்றும்பொழுதே பூமியையும் சுற்றி விடுகின்றன. இன்னொரு விடையான சந்திரனைத் தவிர மற்ற நான்கு கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்திலும் நான் மாறுபடுகிறேன் ஏனெனில் சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றுகிறது.