Skip to main content

திரிவெடி 22 விடைகள்

 

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்:

புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன்

 எல்லோரும் இதற்கான விடைகளை வானவியலிலிருந்து சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். திங்கள் மட்டும் பூமியைச் சுற்றிவருவது என்பதுதான் அது. அருள் அளித்திருக்கும் ஐந்து விடைகளும் வானவியலின் அடிப்படையில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு விடை சுவாரசியமாக இருக்கிறது.  ஆனால் நான் எதிர்பார்க்காத விடை, பத்மா அளித்திருப்பது. செவ்வாய்க் கிழமை மட்டும் கல்யாண முகூர்த்தம் இருக்காது என்பதும் பொருத்தமான விடையே.

எல்லோருக்கும் பாராட்டுகள்.

விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

GUNA said…

திங்கள் மட்டுமே பூமியைச் சுற்றுகிறது என்பது பொருத்தமில்லாத விடை என நினைக்கிறேன்.ஏனெனில் செவ்வாய்,வியாழன் இரண்டும் (சூரியனிடமிருந்து கணக்கிடும்பொழுது) பூமியின் வெளி வட்டத்தில இருப்பதால் , அவை இரண்டும் சூரியனைச் சுற்றும்பொழுதே பூமியையும் சுற்றி விடுகின்றன. இன்னொரு விடையான சந்திரனைத் தவிர மற்ற நான்கு கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்திலும் நான் மாறுபடுகிறேன் ஏனெனில் சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றுகிறது.
GUNA said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
நன்றி குணா. இந்த விடையில் அறிவியல் ரீதியான குறைகளைச் சுட்டிக் காட்டியதற்கு.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்