Skip to main content

விடை 4308

 

 நேற்றைய வெடி:
 சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4)

 
அதற்கான விடை:   பார்வதி  = பாதி + ர்வ
ர்வ‌ = பாதி கர்வம்


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

 நேற்றைய திரிவெடிக்கான நான் அளித்த  விடை பொருத்தமில்லை என்று குணா கருத்தளித்திருக்கிறார். அவருடைய ஆட்சேபணை சரியானதே என்பதை அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம், இதோ:

திங்கள் மட்டுமே பூமியைச் சுற்றுகிறது என்பது பொருத்தமில்லாத விடை என நினைக்கிறேன்.ஏனெனில் செவ்வாய்,வியாழன் இரண்டும் (சூரியனிடமிருந்து கணக்கிடும்பொழுது) பூமியின் வெளி வட்டத்தில இருப்பதால் , அவை இரண்டும் சூரியனைச் சுற்றும்பொழுதே பூமியையும் சுற்றி விடுகின்றன. இன்னொரு விடையான சந்திரனைத் தவிர மற்ற நான்கு கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்திலும் நான் மாறுபடுகிறேன் ஏனெனில் சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. --- (குணா)
 

நான் என்னுடைய விடையை சற்றே வேறுவிதமாக விளக்கியிருக்க வேண்டும் (பல வாசகர்கள் சரியாக விளக்கியதைப் போன்று):
நாம் திங்கள் எனக்கூறும் வானவெளி வஸ்து அறிவியலில் பூமியின் துணைக்கோள் (moon/satellite) எனப்படுகிறது.

மற்ற நான்கு வான்வெளி வஸ்துகளை  அறிஞர்கள் (சூரியக் குடும்பத்தின்)  கோள்கள்  (planets of solar system) என்கிறார்கள். அதுதான் சரியான விளக்கம்/வித்தியாசம்.

பூமியைச் சுற்றி வருவது, சூரியனைச் சுற்றிவருவது என்பது அவற்றை வேறுபடுத்திக் காட்டாது என்ற நுட்பமான    காரணத்தை   சுட்டிக் காட்டிய அவருக்கு நன்றி.


Comments

GUNA said…
கூறிய நன்றியைக் கூச்சமும் தாழ்மையும்
ஏறிய நெஞ்சுடன் ஏற்கின்றேன் -- தேறிய
ஆசிரியர் தாங்கள், அரிச்சுவடி மாணவன்,நான்.
காசினியோர் ஏற்கும் கருத்து

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்