Skip to main content

உதிரிவெடி 4308

 

 உதிரிவெடி 4308

 (செப்டம்பர் 1, 2024)
வாஞ்சிநாதன்

********

சென்றவாரம் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் புதிருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு புதிர் செய்து பாதிதான் திருப்திகரமாக இருந்தது. அரைமனதுடன் இருந்தேன், வெளியிடலாமா வேண்டாமா என்று. இப்படிப் பாதிப் பாதி நிலையில் முடிவெடுக்கக் கூடாது என்று கடைசி நிமிடத்தில் நிறுத்தி விட்டேன். ஆனால் இன்று பாதி, பாதி, பாதி திருப்திகரமாக  புதிர் செய்து விட்டேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோ அது:


சிவனுடைய பாதி பாதி பாதி கர்வம் அடங்கியது (4)

விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும்.

உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

Comments

Meena said…
Awesome clue. Nice way to distract and confuse.
Vanchinathan said…
பாதி பேருக்காவது பிடித்திருக்கும் என்று நம்பினேன். ஒரு முழு வாசகருக்குப் பிடித்துவிட்டது! நன்றி மீனா!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.