Skip to main content

திரிவெடி 24 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

அரசன்,  தலைவன்,  நாயகன்,  நடிகன்,  பாடகன்

அதற்கான விடை: நடிகன்
இந்த ஐந்தும் ஆண்பாலைக் குறிக்கும் சொற்களே என்றாலும், அதையொத்த பெண்பாற்சொல்லைக் காணும்போது வேறுபாடு தெரியும்:
 
அரசன்  --> அரசி
தலைவன் --> தலைவி
நாயகன் -->   நாயகி
பாடகன் ---> பாடகி

ஆனால், நடிகன் --->  நடிகை,   நடிகி அல்ல.

ஏன் இந்த வேறுபாடு? இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்று நினைத்தபோது எனக்குத் தென்பட்டது இது: மாறும்  எழுத்துக்கு முந்தைய எழுத்து இகரத்தில் முடிந்தால், இன்னொரு இகரம் சேர்வது காதுக்கு இனிமையில்லை என்று தெரிகிறது.
அதனால் ஆசிரியன் ‍‍> ஆசிரியை,   புத்தகப்பிரியன் ‍‍> புத்தகப்பிரியை.

இன்று வெவ்வேரறு விடைகளைப் பலர் அளித்தாலும், இந்த ஆண்பால்/பெண்பால் விஷயத்தை கவனித்தவர்கள் பெண்களாக‌ மட்டுமே இருக்கிறார்கள்!
 
 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

M Muthusubramanyam said…
விடையளித்தவர்கள் பட்டியலை மாற்ற வேண்டும்.
Anonymous said…
நான் பெண்ணல்லவே
ராமராவ் said…
நான் பெண்ணல்லவே
Vanchinathan said…
மன்னிக்கவும். காலை ஐந்தரை மணிக்கு வந்திருந்த விடைகளின் அடிப்படையில் எழுதியது அது. கடைசி நிமிடத்தில் வந்து ஆண்கள் கட்சிக்கு வலு சேர்த்த உங்களுக்கு பாராட்டுகள்
GUNA said…
அருளெனும் வாசகரும் ஆண்பால்தான் என்னும்
புரிதல் இலாத பதிவால் - பெரிதும்
திகைத்தேன் சிறிதுநேரம் சென்றதும் நன்றாய்
நகைத்தேன் நினைத்து நினைத்து.
GUNA said…
மகிழினி, தமிழினி போன்ற, மூன்று இகர ஒலிக்குறிப்புகள் தொடர்ந்து வருகின்ற சொற்கள் இனிமையாகத்தானே உள்ளன.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்