நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
குற்றாலீஸ்வரர், கும்பேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், மருந்தீஸ்வரர், எறும்பீஸர்
அதற்கான விடை: மருந்தீஸ்வரர்
சிவாலயங்கள் ஒவ்வொன்றிலும் மூலவருக்குத் தனியான பெயருண்டு (ஆனால் வடிவம் என்னவோ அதே லிங்கம்தான்!) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து சொற்களும் ஐந்து வேறான சிவாலயங்களிலுள்ள சிவனின் பெயர்கள்தான். ஆனால் மருந்தீஸ்வரரைத் தவிர மற்றவை அக்கோவில் அமைந்துள்ள ஊருக்குப் பெயராகவும் அமைந்துள்ளன.
குற்றாலீஸ்வரர் > குற்றாலம்
கும்பேஸ்வரர் > கும்பகோணம்
விருத்தகிரீஸ்வரர் > விருத்தாசலம்
எறும்பீஸர் > திருவெறும்பூர்(திருச்சிக்கு அருகில் உள்ள ஊர்)
ஆனால் மருந்தீஸ்வரர் இருக்குமிடம் திருவான்மியூர்/சென்னை.
சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், பத்மா, வானதி இம்மூவருக்கும் பாராட்டுகள்
பஞ்ச சபை ஸ்தலங்கள் என்று குற்றாலத்தை மட்டும் தனியாகக் கருதலாம் என்று எஸ் ஆர் பாலசுப்ரமணியன் கூறுவது சரியென்றாலும் மற்ற நான்கையும் இணைக்கும் பொதுவான அம்சம் அவர் விடையில் இல்லையென்பதால் அதை ஏற்க முடியவில்லை.
Comments