Skip to main content

விடை 4316

  நேற்றைய வெடி:

வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5)


அதற்கான விடை:   சிற்றுந்து = சிந்து + காற்று

சிந்து = நதி
ற்று = காற்று, தலை பிய்த்தது

 
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 நேற்றைய திரிவெடிக்கான விடைகளைக் கண்டு கருத்துரையில் குணா எழுதிய வெண்பாவைப் பலரும் கவனிக்காமற் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதை இங்கே நகலெடுத்து அளிக்கிறேன்:

சிந்தை மயக்கும் திரிவெடிப் போட்டிக்கு
வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய்
நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன்
சாலவும் ஒற்றுமை தான். 



குணா அவர்களே, நாலு பேர் சொன்னால் அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

கூர்மதியால் கண்டுரைத்த குணாவுடன் நால்வரின்
சீர்மிகு  சிந்தனையைச் செப்பிடுவேன் இத்தருணம்
ஊர்தெரிய இங்கே உணர்ந்து.


Comments

GUNA said…
This comment has been removed by the author.
GUNA said…
கண்டுரைத்த சொல்லைக்  குணாதொடர்தல் நூல்களில் விண்டுரைத்த வெண்பா விதிமீறல் --- கண்டுரைத்த சொல்லினைத் தூரமாய்த்  தள்ளிவிட்டுக் "கண்ட" வென்னும் சொல்லினைச்  சேர்த்தல் சிறப்பு

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்