Skip to main content

Posts

Showing posts from November, 2018

விடை 3507

இன்று காலை வெளியான வெடி: உதாரணமாக  அண்டார்டிகா மீனிலிருந்து  வெட்டிய பகுதி  (4) இதற்கான விடை:  கண்டம்;  மீனைத் துண்டு போட்டு உப்புக் கண்டம் செய்வது என்பது வழக்கம். மற்ற இறைச்சிக்கும் பயன்படுத்தும் சொல். கன்ட துண்டமாக வெட்டி என்று சொல்வதும் இதனால்தான்.

உதிரிவெடி 3507

உதிரிவெடி 3507 (30 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** உதாரணமாக அண்டார்டிகா மீனிலிருந்து வெட்டிய பகுதி (4) Loading...

விடை 3506

இன்று வெளியான வெடி: முடியதில் விட்டுவிட்டு வெட்டிய முனை (3) இதற்கான விடை:  முயல் = மு டி ய தி ல்

விடை 3505

இன்று காலை வெளியான வெடி: வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)   இதற்கான விடை: செழித்து = வளம் பெருகி  =  செத்து  + (கோ) ழி

உதிரிவெடி 3505

உதிரிவெடி 3505 (28 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)  Loading...

விடை 3504

இன்று காலை வெளியான வெடி: பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5) இதற்கான விடை: வெடிகுண்டு = வெகுண்டு + படித்து - ‍ பத்து

உதிரிவெடி 3504

உதிரிவெடி 3504 (27 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் *********************** பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5)  Loading...

விடை 3503

இன்று காலை வெளியான வெடி: சுருக்கம், சுருக்கம், சுருக்கம், அடையாளம் (4) இதற்கான விடை:  முத்திரை = "மூன்று" திரை;  திரை = (தோலில் ஏற்படும்) சுருக்கம்); சுருக்கம் கொண்ட துணி (நாடகத் திரை) கடல் தண்ணீரின் பரப்பில் அலையாய் ஏற்படும் சுருக்கம் = திரை முத்திரை = அடையாளம். ( இந்தப் பாடலில் ஏ ஆர் ரஹ்மானின் முத்திரையைக் காணலாம் )

விடை 3502

இன்று காலை வெளியான வெடி: சாகும் மிருகம் இறுதியாக வரும் முன்பே மேலிருந்து கொண்டு வா (5) இதற்கான விடை:  இறக்கும் = ம் முன்பு இறக்கு 

Krypton 86 Solution

Today's clue : Unusually attractive, electrified Xenon, oxidized the Iodine compound initially (6) Its solution is  EXOTIC ,(= Unusually attractive; formed with the initial letters of the next 6 words of the clue). At 9 pm I wanted to share another clue that I came up for that same word. Foreign educated  Xerox operator takes impressive copies initially (6) (It would have been better if an hyphen was given between Foreign and educated, but that might be better English but a bad puzzle. So left it slightly imperfect).   From the listed solvers the last 4 solved the later clue, as they were submitted after 9pm. Actually now I feel the would have been better if one word was changed  like below: Foreign educated Xerox operator takes identical copies initially (6) I promise no more clues for this exotic word.  1)  6:01:31    S.Parthasarathy  2)  6:01:36    Lakshmi Shankar  3)  6:02:35 ...

உதிரி வெடி 3502

உதிரிவெடி 3502 (25 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** To see today's English clue, click here . சாகும் மிருகம் இறுதியாக வரும் முன்பே மேலிருந்து கொண்டு வா (5) Loading...

Solution to Krypton 85

Today's clue: Grow headless pest inside a gate (9) Its solution: GERMINATE= GATE + (V) ERMIN Solved by the the following 26 persons: 1)  6:02:31    Sandhya 2)  6:03:06    S.Parthasarathy 3)  6:04:17    Ambika 4)  6:04:30    S.R.BALASUBRAMANIAN 5)  6:04:32    Muthusubramanyam 6)  6:05:34    Rukmani Gopalan 7)  6:06:14    Nanganallur Chittanandam 8)  6:08:39    Lakshmi Shankar 9)  6:11:51    R.Narayanan. 10)  6:13:24    Siddhan Subramanian 11)  6:14:40    KB 12)  6:23:17    Kesavan 13)  6:26:39    Srivina 14)  6:34:04    Dhayanandan Bhaskar 15)  6:34:43    Ravi Sundaram 16)  6:35:08    NATHAN NT 17)  6:47:14    Ramarao 18)  6:...

விடை 3501

இன்று காலை வெளியான வெடி கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4) இதற்கான விடை: விழித்து  = ழி இருக்க, வெளியே சென்றது வித்து.

உதிரிவெடி 3501

உதிரிவெடி 3501 (24 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ************************** To see today's English clue click this. கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4) Loading...

விடை 3500

இன்று காலை வெளியான வெடி: திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4) இதற்கான விடை:  மீட்டது  விடைக்கான விளக்கத்தை ஆர்வமுள்ளவர்கள்  கருத்துரையாக இடலாம். தமிழில் "ள்" என்ற எழுத்தில் முடியும் வினைச் சொற்கள் எளிதில் புலப்படாதவிதமாய் மாற்றமடைகின்றன.  நீள், வறள், புறள் என்பவை நீண்டு, வறண்டு, புரண்டு என்று என்றும், பெயர்ச்சொல்லாகும்போது  நீட்சி, வறட்சி, புரட்சி என்றும்  உருமாறுகின்றன.  ஏற்கனெவே தோசையைப்  புரட்சியால் (புரளவைத்து) விளைந்த தின்பண்டம் என்று புதிரமைத்திருக்கிறேன். இன்றைய வெடிக்கு வேரான வினைச்சொல் "மீள்". அது மீண்டு, மீட்டு (தன்வினை, பிறவினை)  என்று  இறந்தகால எச்சமாக வரும். மீட்சி என்ற சொல்லை பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் அழகாகக் கையாண்டுள்ளார்கள். ("மீட்பர் ஏசு").   மீட்டு என்பது வினையாக வீணையின் கம்பிகளில் விரலால்  அதிரவைப்பதைக் குறிக்கும். என்றாவது அதை வைத்தும் உங்களை  மீளாத் தொல்லையில் ஆழ்த்தும்படி ஒரு புதிர் செய்துவிட வேண்டும். 

உதிரிவெடி 3500

உதிரிவெடி 3500 (23 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************* திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4) Loading...

விடை 3499

இன்று காலை வெளியான வெடி: கரைகளில்லாமல் வற்றும் ஒரு நதி புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து (5) இதற்கான விடை: சிற்றுந்து = சிந்து + ற்று

உதிரிவெடி 3499

உதிரிவெடி 3499 (22 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் **********************  கரைகளில்லாமல் வற்றும் ஒரு நதி புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து (5) Loading...

விடை 3498

இன்று காலை வெளியான வெடி: ஓரிடத்தில் திரட்டி வைத்துள்ள ஆமணக்கு வித்துகள் (4) இதற்கான விடை:  குவித்து  ( ஆமணக் குவித்து கள்)

உதிரிவெடி 3498

உதிரிவெடி 3498 (21 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ************************ ஓரிடத்தில் திரட்டி வைத்துள்ள ஆமணக்கு வித்துகள் (4) Loading...

விடை 3497

இன்று காலை வெளியான வெடி: கோயில் காளைக்கு எதிரிலிருக்கும் ஒரு மிருகம் உள்ளே இழு (6) இதற்கான விடை:  சிவலிங்கம் = சிங்கம் + வலி (படகை ஓட்ட துடுப்பை வலிக்க வேண்டும். கயிற்றை வலித்து பட்டத்தை வானில் உயரே பறக்கவிட்டான்). திருநாளைப்போவாருக்கு சிவலிங்கத்தை மறைத்துப் பின்னர் விலகிய கோயில் காளை நினைவிருக்கிறதா?

உதிரிவெடி 3497

உதிரிவெடி 3497 (20 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ************************* கோயில் காளைக்கு எதிரிலிருக்கும் ஒரு மிருகம் உள்ளே இழு (6) Loading...

விடை 3496

இன்று காலை வெளியான வெடி: வாக்கியத்தை முடிப்பது பெரிதானால் பணக்காரன் (3) இதற்கான விடை: புள்ளி

விடை 3495

இன்றைய புதிர்: நஷ்டத்தில் மனைவி போக எரிந்த விறகு திரட்டு (3) இதற்கான விடை:  சேகரி = சே(தாரம்)  +  கரி

Solution to Krypto 84

Today's clue: Third degree confinement for her results in being angelic (8) Its solution:  CHERUBIC   = CUBIC  HER Solved by the following 21 persons:   1)  6:04:43    S.Parthasarathy   2)  6:06:44    Sandhya   3)  6:07:10    S.R.BALASUBRAMANIAN   4)  6:07:24    Ravi Subramanian   5)  6:07:39    Sandhya   6)  6:12:37    Ramarao   7)  6:13:05    Raja Rangarajan   8)  6:15:52    Kesavan   9)  6:16:46    KB  10)  6:21:21    Lakshmi Shankar  11)  6:27:04    Ambika  12)  6:55:18    Siddhan Subramanian  13)  7:13:31    Ravi Sundaram  14)  7:26:43    Philistine  15)  7:52:14    Sridharan  16)  7...

Solution to Krypton 83

Today's clue: Reworking on ISI citadel converted into leaning type (10) Its solution: ITALICISED (Italics, aleaning typeface/font as opposed to Roman, an upright font). Solved by 25 persons: 1) 6:05:11    S.Parthasarathy 2) 6:07:15    Sundar Vedantham 3) 6:08:53    Kesavan 4) 6:12:55    Ravi Sundaram 5) 6:17:54    KB 6) 6:19:54    Dhayanandan Bhaskar 7) 6:23:22    Ravi Subramanian 8) 6:24:54    S.R.BALASUBRAMANIAN 9) 6:25:11    Bhuvana Sivaraman 10) 6:30:55    Lakshmi Shankar 11) 6:34:38    R.Narayanan 12) 6:46:47    Natarajan B 13) 7:01:23    Siddhan Subramanian 14) 7:07:24    Bala 15) 7:22:13    Rukmani Gopalan 16) 8:07:02    Sridharan 17) 8:38:49    Raja Rangarsjan 18) 9:39:56    Ambika 19) 10:47:20 ...

விடை 3494

இன்று காலை வெளியான வெடி களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)   இதற்கான விடை : நாட்டம்  = நாம் + கட்டளை - களை

உதிரிவெடி 3494

உதிரிவெடி 3494 (17 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் *************** To see today's English clue visit this page. களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)  Loading...

Krypton 83

Krypton 83 (17th November 2018) Vanchinathan ************************** Italy seems to be the the favourite spot where celebrities prefer to get married. Perhaps one such wedding several centuries ago caused a large crowd to assemble and made the tower at Pisa lean to one side. Had they roped in Agaththiyar's services or if the crowd were are all Romans this would not have happended :-)  Anyway in today's Krypton, now we are going to do anti-Agatiyar service to the den of plotters against India. Have fun! Reworking on ISI citadel converted into leaning type (10) . . . .

விடை 3493

இன்று காலை வெளியான வெடி: இன்று முதல் இயற்கையின் சீற்றம் தாண்டவமாடும் குணம் (4) இதற்கான விடை: இயல்பு = இ + புயல் (விடையளித்தவர்கள் பட்டியலை இன்று ராஜி ஹரிஹரன் வெளியிடுவார்).

உதிரிவெடி 3493

உதிரிவெடி 3493 (16 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் *********************  அடிக்கிற மழையிலும் பேய்க்காற்றிலும் எங்கேயும் போக முடியவில்லையா? செய்தித்தாள் போடும் பையன் வரவில்லையா? உயர் தொழில்நுட்ப நேரடித் தொலைக்காட்சி வராமல் சண்டித்தனம் செய்கிறதா? இப்படி நண்பர்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று  உங்களிடம் முறையிடுகிறார்களா? இதுபோன்ற புதிரில் மூழ்குவதை வாடிக்கையாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.  புதிரைப் போடுவதற்குக் கட்டணம் நூறு ரூபாயில் இரண்டு ஐம்பது  கஜா சிறப்புத் தள்ளுபடி செய்து அவர்களை வரவேற்கிறேன். தாமதமாக வந்தால் தள்ளுபடி நூற்றுக்கு வெறும் நான்கு இருபத்தைந்தாக்கப்படும். முந்தச் சொல்லுங்கள்!   இன்று முதல் இயற்கையின் சீற்றம் தாண்டவமாடும் குணம் (4) Loading...

விடை 3492

இன்றைய வெடி: காயப்போட்டு  திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)   இதற்கான விடை:  உலர்த்தி = உத்தி + (ப)லர் புயலும் மழையும் கொட்டப்போகிறது என்று முன்னேற்பாடாகக் காலையிலேயே துவைத்துத் துணியைக் காயப்போட்ட சென்னைவாசிகளுக்காக இந்த புதிர்! புயல் வந்தாலும் வராவிட்டாலும் வாடிக்கைபோல் காலை 6 மணியளவில்  நாளைய வெடி வீசப்படும் (120கிமீ வேகத்தில்,  ஜாக்கிரதை!)

உதிரிவெடி 3492

உதிரிவெடி  3492 (15 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ***************** காயப்போட்டு  திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)   Loading...

விடை 3491

இன்றைய வெடி: சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2) இதற்கான விடை:  குறி = குன்றி - ன்  (வினைசொல்லாக சுட்டு என்பதுடன் ஒத்த பொருளுடையது குறி. ஆங்கிலத்தில் indicate) இன்று வந்த பலவிதமான விடைகளில் மிகவும் நெருக்கமானது: "இது". இவ்விடை இளைத்து (சிறுத்து) என்பதில் உள்ளிருப்பது போகப் பெறப்பட்டது இதன் அழகு. "இது" என்பது சுட்டுப்பெயர். மொத்தம் வந்த 61 விடைகளில் 25 சரியானவை.  வந்த மற்ற விடைகள்: வாடி, உளி, சூடு, சுடு, நீர், ஓடு, காய், உது, வறு, மதி, சிதை, எது, திரி, ரவை

உதிரிவெடி 3491

உதிரிவெடி 3491 (14 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் *********************** சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2) Loading...  

விடை 3490

இன்று காலை வெளியான வெடி: துவளும் தாவரம் கடைசியாகத் துவண்டது கொடுமை (3) இதற்கான விடை: கொடிது = கொடி + து  இன்று சுமார் 50 பேர் சரியான விடையளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த எளிய புதிரைத் தவற விட்டோமே என்று மற்றவர்கள் துவள வேண்டாம். நாளை கொடுமையான (அதாவது கடுமையான) புதிர் வரும்.  :-)

விடை 3489

இன்று காலை வெளியான வெடி: கட்டு இடை ஒடிய சேவை (2) இதற்கான விடை: தொடு = தொ(ண்)டு பூக்கட்டுதல் = பூத்தொடுத்தல் இன்று வந்த விடைகள் 45, சரியான விடைகள் 17. பத்து விதமான விடைகள் வந்துள்ளன. அதிகம் வந்த தவறான விடைகள்: பணி, தொகை, அமை, இடு, படை...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

Solution to Krypton 82

The clue for this Sunday was: An old country friend is French, at home English (9) Its solution: PALESTINE = PAL  EST  IN  E EDIT (on Monday morning): Made a mistake while preparing  the solver's list last night.  The first person to solve at time 6:03 is RAVI SUBRAMANIAN.  While doing cut and paste it got omitted. Thanks Ravi for being patient. And also for posting the list yesterday on my behalf. Revised list of solvers (16 persons) below:  1)  6:03:54    Ravi Subramanian  2)  6:04:36    S.Parthasarathy  3)  6:06:00    Ravi Sundaram  4)  6:14:54    S.R.BALASUBRAMANIAN  5)  6:44:58    Thirumoorthi Subramanian  6)  6:45:08    KB       7)  7:03:44    R.Narayanan.  8)  7:08:51    Kesavan  9)  7:30:44  ...

உதிரிவெடி 3488

உதிரிவெடி 3488 (11 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ***************** வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) Loading...

Solution to Krypton 81

Today's  clue: Without hesitation, vocalist, internally healthy, has unhealthy enlargement (8) It's solution : SWELLING . = Sing + well Solvers list today might be by a volunteer as a comment to this post later or tomorrow by me. (Currently I am out of town without my laptop.  Editing an excel sheet using phone is prone to errors. So kindly bear with me )

விடை 3487

இன்று  காலை வெளியான வெடி : கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4) இதற்கான  விடை:   முடித்து = முத்து + ஆண்டி - ஆண்

Krypton 81

Krypton 81 (10th November 2018) Vanchinathan *********************** Without hesitation, vocalist, internally healthy, has unhealthy enlargement (8) . . . .

உதிரிவெடி 3487

உதிரிவெடி 3487 (10 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ***************** கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)  Loading...

விடை 3486

விடை 3486 இன்று காலை வெளியான வெடி: மூடினாலும் மறைக்காத் துணியுடன் பாதி இன்பம் தரும் சிருங்காரப் பேச்சு (5) இதற்கான விடை: சல்லாபம் ;  சல்லா  = மெல்லிய துணி;

உதிரிவெடி 3486

உதிரிவெடி 3486 (9 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ******************** மூடினாலும் மறைக்காத் துணியுடன் பாதி இன்பம் தரும் சிருங்காரப் பேச்சு (5) Loading...

விடை 3485

இன்றைய (சீர்திருத்தப்பட்ட வெடி): தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3)    தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)   இதற்கான விடை: தீரன்   = தீர +  (இருக்கிறா) ன் இந்த விடையைக் கண்டுபிடித்தவர்கள். (1+17 பேர்) 1    கேசவன் 2    KB 3    மு க பாரதி 4    தேன்மொழி 5    சாந்திநாராயணன் 6    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 7    நங்கநல்லூர் சித்தானந்தம் 8    நாதன் நா தோ 9    கி மூ சுரேஷ் 10    ராதா தேசிகன் 11    வி ன் கிருஷ்ணன் 12    மு.க.இராகவன். 13    ராமராவ் 14    ரவி சுப்ரமணியன் 15    எஸ்.பார்த்தசாரதி 16    மீ கண்ணன் 17    மீனாக்ஷி 18    ராஜி ஹரிஹரன்

சீரமைத்த உதிரிவெடி 3485

இன்றைய வெடிக்கு விடைகள் அனுப்பியவர்களே மாலை ஏழு மணிவரை வெறும்  20 பேர்தான்.  அதில் கேசவன் ஒருவர் மட்டும்தான் சரியான விடையை அனுப்பியிருந்தார்.  ஏன் நிலைமை இப்படியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்ததில் நான் செய்தது சரியில்லை என்று தெரிகிறது. நான் நீளமான வெடியாயிருந்தால் சுருக்க முடியுமா என்று யோசிப்பேன். இன்று அதைச் செய்யாததால் காலந்தாழ்த்திச் செய்கிறேன். புதிர் மிகவும் நீளமாக இருக்கிறது. எதை எங்கே போய் முட்டிப் பார்ப்பது என்றால் சிக்கலாகிக் குழப்பமாகிவிடுகிறது. ஒத்துக் கொள்கிறேன், இது போன்ற புதிரை நான் ரசிக்க மாட்டேன். பழைய வடிவம்: தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)   இப்படி மனக் கலக்கத்தை உண்டு பண்ணிய புதிரிலிருந்து மனங்களை விரட்டிச் சீரமைத்த புதிய வடிவம்: தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3)  இப்போது இரவு 10 மணிவரை முயலுங்கள்.

உதிரிவெடி 3485

உதிரிவெடி 3485 (8 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ******************* தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)   இப்போது திருத்தி விட்டேன்:   தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3)  Loading...

தீபாவளிப் புதிருக்கான விடை:

புதிர் வாக்கியம்: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான தெய்வத்தின் ஊரிலுள்ள (A) தன் சொந்த வீட்டில்   பிறந்தநாளைக்   (B) கொண்டாட  அவன்   பளபளக்கும் ஆடையணிந்து (C)   மிடுக்குடன் நடந்து வந்த  போது  அவன் ஓரு  அக்பரின் பட்டம் (D) போல் இருந்தான்  என்பதில்  கொஞ்சங்கூட (E)  சந்தேகமில்லை. விடை வாக்கியம்: நாமக்கல்லிலிருக்கும் (A) தன் சொந்த வீட்டில்   ஜனனதினத்தைக் (B) கொண்டாட  அவன்   பட்டுடுத்தி (C)   மிடுக்குடன் நடந்து வந்த  போது  அவன் ஓரு  பேரரசன் (D) போல் இருந்தான்  என்பதில் எள்ளளவும் (E)  சந்தேகமில்லை. ஜனனதினம் என்பதை பிறந்த திதி என்றும் நான் எண்ணாத மற்றொரு மாற்று சொல்லும் அளிக்கப்பட்டிருக்கிறது.   ஒரே எழுத்து அடுத்தடுத்து ஒரே சொல்லில் இடம்பெறுவதுதான் விசேஷமான ஒற்றுமை. பார்க்கப்போனால் ஆங்கிலம் போல்  தமிழில் இயல்பாக எந்த எழுத்தும் இரட்டிப்பதில்லை (இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள், நான் பத்து ரூபாய்க்கு ஒன்று என்று பணங் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்).  மற்றோ...

விடை 3484

இன்று காலை வெளியான வெடி: விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5) இதற்கான விடை: பரிமாணம் = பரி + மா +  (பி) ணம்  பரிமாணம், கோணம் என்ற இரு சொற்களிம் கணிதத்தில் இரு மிகவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றன (dimension and angle). அப்படியிருக்கையில் எப்படி ஒன்றுக்கு மற்றது பொருளாகும்? கணிதத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன. ஆங்கிலத்தில் aspect என்ற சொல். உதாரணம்: இந்த விஷயத்திற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன. இன்று ஏழெட்டு பேர் விரிகோணம் என்ற விடையை அளித்திருந்தார்கள். (தீபாவளிக்கான விசேஷப்புதிர் விடை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்).

உதிரிவெடி 3484

உதிரிவெடி 3484 ( 7 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5) Loading...

விடை 3483

இன்று காலை வெளியான வெடி: இன்பத்தைத் தருவது நலந்தானா? மனது முதலில் ஒட்டவில்லை (5) இதற்கான விடை : சுகமானது  = சுகமா (நலந்தானா?)  +   னது (மனது -ம) ------------------------- தீபாவளிக்கான விநோதப்புதிர்.  இப்புதிரில் உதிரிவெடியின் தெளிவு இல்லை என்பதை விடையாக வந்திருக்கும் பல சொற்களிலிருந்து தெரிந்து கொள்கிறேன். அதனால் குறிப்புகளில் விவரங்கள் போதாதென்பது தெரிகிறது. அதனால ஒரு விவரம் அதிகப்படியாக அளித்து (அதாவது முத விடைச் சொல்)  இன்னமும் 24 மணிநேரம் அவகாசத்தை இப்புதிருக்கு நீட்டிக்கிறேன். அதோடு பலருக்கு தீபாவளிக் கொண்டாட்டத்தில் வழக்கம்போல நேரம் ஒதுக்கியிருக்க முடியாது. முதலாவதாக வரவேண்டிய சொல் " நாமக்கல்லிலிருக்கும் ". சாதாரணமாகத் தமிழ்ச் சொற்களில் இல்லாத அமைப்பு இதில் காணலாம்.  மற்ற விடைகளும்  இந்த  குணாம்சத்தை கொண்டிருக்க வேண்டும். " நாமக்கல்லிலுள்ள " என்று எழுதினால் அது தவறாகிவிடும்.  இப்போது மீண்டும்  அப்புதிரை   எட்டிப் பாருங்கள்! இதுவரை அந்த குணாம்சத்தைக் கண்டு விடையளித்தவர்கள் இரண்டு பேர்: 1. அம்பிகா   2. ஹரி ப...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடி 3483

உதிரிவெடி 3483 (6 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் *********************** எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். முதலில் ஒரு உதிரிவெடியை வெடித்துவிட்டுப் பின்னர் 8 மணிக்குத் திரும்பி வாருங்கள். ஒரு சிறிய  வித்தியாசமான சரவெடி கிடைக்கும். இன்றைய வெடி: இன்பத்தைத் தருவது நலந்தானா? மனது முதலில் ஒட்டவில்லை (5) Loading...

விடை 3482

இன்று காலை வெளியான வெடி: செறிந்து பூமியின் மேல் காணப்படுவது செடியின் பகுதி (3) இதற்கான விடை: மண்டி = மண் + (செ) டி உண்டுநாம் வாழ உழவர் உழைத்திடுவர்  வண்டல் பரந்திருக்கும் வயல்வெளியில் நெற்பயிர் மண்டிக் கிடந்து வளங்கொழிக்க வேண்டிடுவேன் தண்டமிழில் பாவெழுதித் தந்து இன்றைய புதிரை முயன்றவர்கள் 33 பேர். அதில் 16 பேர்  விடைகள் சரியானவை:   1)  6:18:09   முத்துசுப்ரமண்யம்  2)  6:20:57    எஸ் பி சுரேஷ்  3)  7:17:42    பாலு  மீ  4)  7:31:14    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்  5)  8:00:06    மாலதி  6)  8:08:01    பிரசாத் வேணுகோபால்  7)  8:16:19    KB  8)  8:23:48    மீ கண்ணன்  9)  8:27:01    லட்சுமி சங்கர் 10)  9:25:06    மீனாக்ஷி 11)  10:02:37   லதா 12)  10:44:30   ராமராவ் 13)  11:48:16   இரா.செகு...

உதிரிவெடி 3482

உதிரிவெடி 3482 (5 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** செறிந்து பூமியின் மேல் காணப்படுவது செடியின் பகுதி (3)    Loading...

விடை 3481

இன்று காலை வெளியான வெடி: ஒடுக்கப்பட்டோர்  இசைக்கருவி மழையால் நடுவில் ஒதுங்கிய  குந்தவை இருந்த இடம் (4)  இதற்கான விடை:  பழையாறை = பறை + ழையா  ("மழையால்" நடு) கும்பகோணத்துக்கு மேற்கே 10 கிமீ தொலைவில் அரசலாற்றங்கரையில் உள்ள ஊர். ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை அங்கே ஒரு மாளிகையில் இருந்து வந்தார். பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். (அங்கே ஒரு கிராமத்துக்கு இப்போதுள்ள பெயரே "சோழன் மாளிகை")

Solution to Krypton 80

Today's clue: Recycled paper is dead and can't be seen anymore (11) Its solution: DISAPPEARED (anagram of  "paper is dead") Cooked up the anagram while staring at this book: Solved by the following 29 persons:  1) 6:14:33     S.Parthasarathy  2) 6:14:52     Kesavan  3) 6:15:55     Ravi Subramanian  4) 6:22:28     Lakshmi Shankar  5) 6:27:48     Nanganallur Chittanandam  6) 6:30:01     Senthil  7) 6:30:16     Muthusubramanyam  8) 6:37:24     S.R.BALASUBRAMANIAN  9) 6:53:16     ravi sundaram  10) 6:55:34    Hari Balakrishnan  11) 7:02:52    Ramarao  12) 7:04:25    Siddhan Subramanian  13) 7:06:51    S P Suresh  14) 7:17:16    Govindarajan  15) 7:33...

உதிரிவெடி 3481

உதிரிவெடி 3481 (4 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ******************* ஒடுக்கப்பட்டோர்  இசைக்கருவி மழையால் நடுவில் ஒதுங்கி ய  குந்தவை இருந்த இடம் (4) Loading...

விடை 3480

இன்று காலை வெளியான வெடி: வெட்டிய நாக்கால் தடவிய  ஈறு கடைசியாய் மாட்டியது (5) இதற்கான விடை:   நறுக்கிய = நக்கிய + (ஈ) று

Solution to Krypton 79

Today's clue: Without a comment tear holds a dweller (8) Solution: RESIDENT Solved by   6:00:46    S.Parthasarathy   6:04:01    ravi sundaram   6:11:38    Ramarao   6:15:05    R.Narayanan   6:15:27    Kesavan   6:23:38    Raja Rangarajan   6:25:45    Lakshmi Shankar   6:32:32    NT NATHAN   6:33:50    Dhayanandan Bhaskar   7:02:05    S.R.BALASUBRAMANIAN   7:55:16    S P Suresh   8:41:32    Maskarade   11:46:26    Bhuvana Sivaraman   12:31:59    Kee Moo Suresh   16:48:27    Senthil   17:58:07    Meenakshi Ganapathi   20:13:16    Ravi Subramanian

உதிரிவெடி 3480

உதிரிவெடி 3480 (3 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ******************** To see today's English clue visit this page .   வெட்டிய நாக்கால் தடவிய  ஈறு கடைசியாய் மாட்டியது (5) Loading...

விடை 3479

இன்று காலை வெளியான வெடி: அளவைக்  குறைத்து மின்விசிறி  தாக்கியதால் காணப்படுவது (5) இதற்கான விடை:  சிறிதாக்கி   (மின்வி சிறி  தாக்கி யதால்)

உதிரிவெடி 3479

உதிரிவெடி 3479 (2 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ******************** அளவைக்  குறைத்து மின்விசிறி  தாக்கியதால் காணப்படுவது (5)  Loading...

விடை 3478

இன்று காலை வெளியான வெடி: துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் வீட்டுக்கு அய்யர் (5)  இதற்கான விடை: புரோகிதர் = (து) ரோகி + புதர். ஒரு கல்யாணம், காட்சின்னா ஊரில் எல்லோரும் அய்யரை வெச்சு நடத்துவாங்க. ஆனால் இந்த அய்யர் வீட்டில் கல்யாணம் வந்துட்டா ஏதோ புரோகிதர்னு சொல்லி குழப்பிடுவாங்க.  இது  ஏன்னு நான் தீவிரமா யோசிச்சு ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிச்சதை  சொல்றேன், பொறுமையா படிச்சுக்கோங்க. இதுக்கு நான் என்னோடா பிஎச்டி படிப்பில் நடந்ததைச் சொல்லியாகணும். ஆரம்பத்தில் அதையும் இதையும் படி என்று ஒன்றரை வருடம் ஓடி விட்டது. பின்னர் என்னுடைய ஆராய்ச்சி நெறியாளர் "வாஞ்சி நீ அல்ஜீப்ராயிக் குரூப்ல ரிசர்ச் பண்ணுனா நல்லா இருக்கும். அதுக்கு சில பல புத்தகங்களைப் படிக்கணும்."  சரி அப்படியே அவர் சொன்ன புத்தகத்தை மாசக் கணக்கா படிச்சு ஓரளவு புரிஞ்சுகிட்டு போய் நின்னேன்.  "நீ படிச்சா புத்தகமெல்லாம் 1960 வாக்கில் வரைக்கும் நடந்ததைச் சொல்லிருக்கும். இப்ப ஒரு கான்பரன்ஸ் வருது. அதை அட்டென்ட் பண்ணுனா யார் எதுல ரிசர்ச் பண்றாங்க எப்படி பண்றாங்கன்னு புரிஞ்சுக்குவே" அப்படின்னு சொ...

உதிரிவெடி 3478

உதிரிவெடி 3478 (1 நவம்பர் 2018) வாஞ்சிநாதன் ********************** ராணி முத்து நாட்காட்டி இந்திராகாந்தி மறைந்த 35 ஆம் ஆண்டு தொடக்கம் பற்றி நினைவூட்டியதால்  நேற்றைய புதிரை அமைத்தேன். இது கடினமாக இருக்கும் 10, 12 பேர்தான் விடையளிப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் 32 பேர் விடை கண்டுவிட்டார்கள். அர்களுக்குப் பாராட்டுகள்.  எம்கே ராகவன், உஷா இருவரும் இப்புதிரை ரசித்திருக்கிறார்கள் என்று அவர்கள் அளித்த கருத்துரைகளிலிருந்து தெரிகிறது. அவர்களுக்கு நன்றிகள்.  சரி,  இன்று ஒரு  கொலைகாரரைச் சந்திப்போம்: துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் வீட்டுக்கு அய்யர் (5) Loading...