Skip to main content

விடை 3952


இன்று காலை வெளியான வெடி:
குளிர்ந்த நீரோடை  ஓரத்தில் வந்த வெள்ளி அணி (3)
அதற்கான விடை:  தண்டை = தண் + டை

தண் = குளிச்சியான (தண்ணிலவு,  தண்ணீர்)
டை = நீரோடை ஓரம்

கொலுசு போன்று காலில் அணியப்படுவது தண்டை

(தண்டட்டி  என்பது வேறு, அது  காதில் அணியப்படுவது, பாம்படமா அல்லது பாம்படம் போன்றதா தெரியவில்லை).

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Sandhya said…
மண்டை குழம்பியது தண்டை கண்டுபிடிக்க...
தண்ணீர் has become synonymous for just water........
thank you for reminding us that it is actually தண் நீர் cold water
Vanchinathan said…
கன்னடத்தில் நீரு என்று சரியாகச் சொல்கிறார்கள். நாம்தான் எதற்கும் தண்ணீர் என்று சொல்கிறோம். இதில் ஒரு தமாஷ் என்னவென்றால், வெந்நீர் என்று சொல்லாமல் சில சமயம் "சுடு தண்ணீர்" என்று சொல்வது. Hot cold water!
வெள்ளி அணிகலன்கள் மேனியின் வெப்பத்தை
மெள்ளத் தணிவித்தே மேன்மைதரத் - தெள்ளியநல்
பண்டைத் தமிழ்மாந்தர் பாங்காகக் கால்களிலே
தண்டை அணிந்திருந் தார்.
Vanchinathan said…
@சங்கரசுப்ரமணியன்:

வெண்டளை மாறாது வெப்பத்தைப் போக்குமாம்
தண்டையென் றுரைத்தீரே சங்கரரே உம்பாவால்
பண்டையர் பாங்கறிந்தேன் நான்.
RKE said…
To get 2 other meanings of thandai see
https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்