Skip to main content

விடை 3922

இன்று காலை வெளியான வெடி
கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த ராவணன்  தேசம்  வந்து ஒப்பனை (6)
அதற்கான விடை: அலங்காரம் = அரம் ‍+ லங்கா ‍
அரம் ‍ = அதரம் ‍-த
லங்கா ‍=  ஸ்ரீலங்கா ‍- ஸ்ரீ

புதிரை வெளியிட்ட அரை மணி நேரம் கழித்து சிறிய மாற்றம் செய்தால் இன்னமும் சுவாரசியமாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் முப்பது பேராவது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போயிருந்தார்கள். அதனால் செய்யவில்லை. ஆனாலும் தாமதமாக அந்த வடிவத்தை இப்போது அளிக்கிறேன்:
கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த சூர்ப்பனகை தேசம்  வந்து ஒப்பனை (6)
இவ்வெடிக்கு அனுபப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
**********************
கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த ராவணன்  தேசம்  வந்து ஒப்பனை (6)

உதடு = அதரம்
செல்வம் = சிறீ (ஸ்ரீ)
ராவணன்  தேசம்
= சிறீலங்கா (ஸ்ரீலங்கா)
வந்து = indicator

கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு = அ[த]ரம் = அரம்

செல்வத்தை இழந்த ராவணன்  தேசம்
= சிறீலங்கா - சிறீ
= லங்கா
ஒப்பனை =லங்கா inside அரம்
= அலங்காரம்
**********************
ஸ்ரீ அல்லது சிறீ (ஆங்கிலம் - Sri, Shri ,Shre அல்லது Shree, தேவநாகரி - श्री, IASTஒலிபெயர்ப்பு Śrī) என்றால் செல்வம் எனப் பொருள்படும். 
****************
அபிஷேகப்பிரியன்' என்று சர்வேசுவரனைக் கூறுவர். திருமாலை அலங்காரப்பிரியன் என்பர். பெருமாள் கோயிலில் திருமாலுக்கு பட்டாடை, அழகிய ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். இதனால் பெருமாளை அலங்காரப்பிரியர் எனக் கூறுவர்.
***********
பெண்களுக்கு பிடித்த காரம் ? அலங்காரம்! புதிர்!!
Nathan NT said…
ஸ்ரீ லங்கா என்பது இலங்கையின் புதுப்பெயர். இராவணன் காலத்தில் அது வெறும் லங்கா தான்.
Vanchinathan said…
அப்படியா? மனிதர்களுக்குப் போல் நாட்டுக்கும் ஶ்ரீ வைத்து விட்டார்களா?

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்