Skip to main content

விடை 3281

இன்று (18/4/2018) காலை வெளியான வெடி
கால் பணம் சேர்ந்தால் அங்கே மூக்கும் முழியும் இருக்கும் (4)

இதற்கான விடை:  வதனம்;  கால் = 1/4 = வ;  பணம் = தனம்

இன்று நான்கைந்து பேர் "அணங்கு" என்ற‌ விடையையும் இன்னும் சிலர் "லட்சம்" என்ற விடையையும் அனுப்பியிருந்தனர். லட்சம் என்பது லட்சணம் ("மூக்கும் முழியும்") என்பதைக் குறைத்துக் கொணரப்பட்டது என்று நினைக்கிறேன்.  ஆனால் லட்சம் எண்னைக் குறிக்குமே தவிர, பணத்தைக் குறிக்காது.
அண‌ங்கு என்றால், தெய்வம், பேய், பெண்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் "தமிழண‌ங்கே" என்று வரும். இவ்வெடிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:02:52 ரவி சுப்ரமணியன்
2) 6:03:58 எஸ்.பார்த்தசாரதி
3) 6:05:03 ராமராவ்
4) 6:05:04 மைத்ரேயி
5) 6:06:06 சுபா ஸ்ரீநிவாசன்
6) 6:10:20 அம்பிகா
7) 6:12:29 சதீஷ்பாலமுருகன்
8) 6:13:44 சங்கரசுப்பிரமணியன்
9) 6:20:33 கேசவன்
10) 6:32:27 ஆர்.நாராயணன்.
11) 6:36:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:37:25 ரவி சுந்தரம்
13) 6:40:07 எஸ் பி சுரேஷ்
14) 6:49:16 முத்துசுப்ரமண்யம்
15) 6:52:09 Thi Po Ramanathan
16) 7:04:42 கி. பாலசுப்ரமணியன்
17) 8:08:29 மு க பாரதி
18) 8:34:43 ருக்மணி கோபாலன்
19) 9:15:34 நாதன் நா தோ
20) 9:24:22 மீனாக்ஷி கணபதி
21) 9:27:02 லக்ஷ்மி ஷங்கர்
22) 9:49:03 மாலதி
23) 9:49:59 மீனாக்ஷி
24) 10:24:34 ரமணி பாலகிருஷ்ணன்
25) 11:16:58 மீ பாலு
26) 13:08:51 ஏ.டி.வேதாந்தம்
27) 13:09:22 பத்மாசனி
28) 13:10:00 அனுராதாஜெயந்த்
29) 16:06:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 16:31:51 ஆர். பத்மா
31) 17:26:09 மு.க.இராகவன்.
32) 18:35:11 பாலா

************************
அணங்கு என்பதற்கு அழகு என்றும் அகராதி சொல்லுகிறது.
1/4 எப்படி "வ" ஆயிற்று ? "ண" என்பது நாணயத்தின் 1/4= கால் பணம்
அங்கு சேர்ந்து அணங்கு ஆகிறது.
தனம் என்பது பணம் காசு அல்ல ; அது செல்வம்
I am not disputing the answer வதனம் anyway. I will become an argumentative Indian.
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Muthu said…
தமிழ் இலக்கக் குறியீட்டு முறையில் “க” என்பது ஒன்று என்பது போல் “வ” என்பது கால் என்னும் பின்னத்தைக் குறிக்கும்.
நன்றி ஐயா.
Vanchinathan said…
புதிருடைய சுவாரசியமே பல விடைகள் சரியென்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதே. ஆசிரிய‌ர் அளிக்கும் விடை மற்ற‌வற்றிலிருந்து ஒப்பிடும்போது இதுதான் அதிகமாகப் பொருந்திவருகிறது என்று நம்பும்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் புதிரில் ஓட்டை என்று கொள்ள வேண்டும்.

இந்தப் புதிரில் ஓட்டை எதுவுமில்லை. (நான்கைந்து மாதத்துக்கு முன்பு நான் ஒருநாள் ஓட்டையான புதிரை ஒருமுறை அளித்து இரண்டு விடைகளை அளித்தவர்களும் சரியே என்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்