Skip to main content

விடை 3273

இன்று (10/04/2018) காலை வெளியான வெடி:

இறுதிக் கட்டு நீக்கிய விடுதலை ஆட்டத்தில் அகத்திணை நாயகி (3)

இதற்கான விடை:  தலைவி   = விடுதலை - டு

பொருளதிகாரத்தில் அகப்பொருள் பற்றி பேசும்போது, பெயர் குறிப்பிடக் கூடாது என்று சொல்கிறது.   அதனால் தலைவன் தலைவி என்றே உரையாசிரியர்கள் பெயரின்றி எழுதிவார்கள்.

நல்ல வேளை மார்க் சுக்கர்பர்க் அல்லது  கூகிள் நிறுவத்தினர் போன்ற ஆசாமிகள் அகத்திணை நூல்களுக்கு உரையெழுதவில்லை. எழுதியிருந்தால் கூடவே, இது இவராயிருக்கும் என்று எழுதியிருப்பார்கள்.   தலைவனைப் பற்றிய  வர்ணனையிலிருந்து அவன் இப்படி இருப்பான் காவல் துறையினர் கொலையாளியைக் காண படம் வரைவது போன்று செய்திருப்பார்கள்.

 ஓடைக் கரையோரம் வேங்கை மரத்துக்குக் கீழ் பொழுது சாயும் நேரம் தலைவியைச் சந்தித்த  நூறு பேரில் 83 பேர்   அவளுக்கு கொடுக்காப்புளி  வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் வாங்கிக் கொடுக்கிறீர்களா?  வாங்க விருப்பமென்றால்  வாய்க்காலில் ஒரு கல்லை எறியுங்கள்.  காத்திருக்கும் எங்கள் சேவகர்கள் வாய்க்காலின் அக்கரையிலிருந்து ஓடி வந்து ஒரு கூடை நிறைய தேர்ந்தெடுக்கப்பட்ட  சோடை போகாத கொடுக்கப்புளியை அளிப்பார்கள். ஒரு கூடை அரைக்க்கால் வராகன்தான். ஜி எஸ் டி தனி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:47 ராமராவ்
2) 6:02:17 ரவி சுப்ரமணியன்
3) 6:03:25 கி. பாலசுப்ரமணியன்
4) 6:04:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:11 நாதன் நா தோ
6) 6:04:53 லட்சுமி சங்கர்
7) 6:04:55 ராதா தேசிகன்
8) 6:05:06 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:06:14 வானதி
10) 6:06:55 மைத்ரேயி சிவகுமார்
11) 6:06:57 சங்கரசுப்பிரமணியன்
12) 6:09:49 மரு.ப. சந்திரமொளலி
13) 6:10:59 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:15:29 கேசவன்
15) 6:15:44 எஸ்.பார்த்தசாரதி
16) 6:16:17 விஜயா ரவிஷங்கர்
17) 6:16:29 வி ன் கிருஷ்ணன்
18) 6:19:00 ரவிஷங்கர்
19) 6:20:32 ஆர்.நாராயணன்.
20) 6:21:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:24:06 மு.க.இராகவன்.
22) 6:27:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:29:14 கே.ஆர்.சந்தானம்
24) 6:29:57 எஸ் பி சுரேஷ்
25) 6:32:35 வித்யா ஹரி
26) 6:37:04 லதா
27) 6:38:14 மீனாக்ஷி கணபதி
28) 6:38:34 சுந்தர் வேதாந்தம்
29) 6:41:31 கல்பனா
30) 6:54:14 Thi Po Ramanathan
31) 6:56:44 சாந்திநாராயணன்
32) 6:59:05 மீ கண்ணன்
33) 7:03:15 சித்தன்
34) 7:07:17 ரவி சுந்தரம்
35) 7:07:37 ருக்மணி கோபாலன்
36) 7:09:04 கு.கனகசபாபதி , மும்பை
37) 7:24:23 அம்பிகா
38) 7:38:31 ராஜி ஹரிஹரன்
39) 8:15:32 செந்தில் சௌரிராஜன்
40) 9:32:35 ரமணி பாலகிருஷ்ணன்
41) 9:38:38 ராஜா ரங்கராஜன்
42) 9:51:47 கி மூ சுரேஷ்
43) 10:33:45 ஆர். பத்மா
44) 10:42:18 புவனா சிவராமன்
45) 10:44:23 சதீஷ்பாலமுருகன்
46) 16:40:01 பானுபாலு
47) 17:31:05 கல்யாணி தேசிகன்
48) 17:38:40 ஏ.டி.வேதாந்தம்
49) 17:39:13 பத்மாசனி
50) 18:02:14 கோவிந்தராஜன்
51) 19:23:20 பாலா
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்