Skip to main content

பொங்கல் சரத்தின் விடைகள்

* பொங்கல் 2018 வெடிச் சரத்திற்கான விடைகள்:
குறுக்காக: 
5. வாடியபயிர் , 6. ருசி, 7. அவலம், 9. புறங்கை, 10. உகந்த, 12. தளும்பி, 13. ஐயா, 14. மருத்துவம்
நெடுக்காக: 
1. கோடி, 2. உபயம், 3. ஈர்ப்பு, 4. மிருதங்கம், 8. வக்கணையாக, 
11. தருமன், 12. தனித்து, 15. வலி

இப்புதிர்  1989ல் செய்தது.   அப்படியே மாற்றாமல் போட்டுவிட்டேன். இன்று சிலவற்றை வேறுமாதிரிச் செய்திருப்பேன்.
புதிரில் இருக்கும் ஓட்டைகளைக் கருத்துரையாகச்  சொல்லலாம்.
 இந்த சர வெடியில் உள்ள 16 புதிர்களுக்கும்  விளக்கங்களையும் நீங்களே கருத்துரையில்  எழுதலாம்.

Comments

Ambika said…
*****(எல்லா (16) விடைகளையும் அளித்தவர்கள்)

1/14/2018 7:39:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/14/2018 7:41:31 லக்ஷ்மி ஷங்கர்
1/14/2018 10:37:25 ராஜா ரங்கராஜன்
1/14/2018 11:03:15 ராஜி ஹரிஹரன்
1/14/2018 11:14:44 பினாத்தல் சுரேஷ்
1/14/2018 13:53:04 கேசவன்
1/14/2018 14:17:45 எஸ்.பார்த்தசாரதி
1/14/2018 16:14:44 எஸ் பி சுரேஷ்
1/14/2018 18:35:01 கி.பாலசுப்ரமணியன்
1/14/2018 22:55:52 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/14/2018 22:55:52 நாதன் நா தோ
1/15/2018 8:05:15 அம்பிகா
1/15/2018 10:27:37 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/15/2018 11:54:59 மு.க.இராகவன்
1/15/2018 13:49:45 சங்கரசுப்பிரமணியன்
1/15/2018 18:35:05 ரமணி பாலகிருஷ்ணன்

****(15 சரியான‌ விடைகள் அளித்தவர்கள்)

1/14/2018 13:42:14 ஜீவமோகன்
1/14/2018 16:00:04 வீ. ஆர். பாலகிருஷ்ணன்
1/14/2018 17:25:39 சாந்திநாராயணன்
1/14/2018 19:16:26 மீனாக்ஷி கணபதி

***(14 சரியான‌ விடைகள் அளித்தவர்கள்)
1/14/2018 6:38:29 முத்துசுப்ரமண்யம்
1/14/2018 10:54:40 ஆர்.நாராயணன்
1/14/2018 12:34:47 ஶ்ரீவிநா
1/15/2018 2:39:39 மீனா சிவராமன்
1/15/2018 3:00:44 ரவி சுப்ரமணியன்

*****************************
Raji said…
குறுக்காக

5. வள்ளலாரை துன்புறுத்திய வெறியர் வாயிற்படி ஆர்ப்பாட்டத்தில் வெற்றி இழந்தனர்

(வெறியர் வாயிற்படி ) - வெற்றி = யர்வாயிபடி = வாடிய பயிர்

வள்ளலார் - "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்

6. ஒரு சிறந்த சமையலில் இருக்க வேண்டியது

ருசி

7. மோசமான நிலைக்கு அழ தொடங்கி சுற்றி வருதல்

அழ தொடங்கி = அ
சுற்றி வருதல் = வலம்
மோசமான நிலை - அவலம்

10. ஏற்ற சுழி ஓரம் கிழிந்த பழந்தத்துணி

பழந்துணி - கந்தல் (ஓரம் கிழிந்த = கந்த)
சுழி - உ

உகந்த

12. குடத்திலே துள்ளி சின்னவன் சுமந்த பாதி பளு

சின்னவன் = தம்பி
பாதி பளு = ளு
தளும்பி

13. சந்தோஷத்தில் மரியாதையுடன் ஒருவரை அழைப்பது

ஐயா (ஐ! யா )

14 - சிகிச்சை மாற்ற மசிப்பது வரும்

மருத்துவம் ( மத்து வரும்)

Raji said…
நெடுக்காக

1. குறிப்பு சிறிதெனினும் பல லட்சம் பெரும்

கோடி

2. குலையை நடுக்குவதுக்கு முன் சுழி நன்கொடை

குலையை நடுக்குவது = பயம்
சுழி = உ

உபயம் (நன்கொடை)

3. ஒரு பூச்சி தலையின்றி சேர்ப்பு கவர்ந்திழுக்கும்

ஒரு பூச்சி = ஈ
தலையின்றி சேர்ப்பு = ரப்பு

ஈர்ப்பு (கவர்ந்திழுக்கும்)

4. சிவனிடம் பாடல் கடன் பெற்றவன் மேற்செல்ல அங்கம் குறைந்தவன் குறைந்தவன் வாசிப்பது

சிவனிடம் பாடல் கடன் பெற்றவன் = தருமி , மேற்செல்ல = மிருத

அங்கம் குறைந்தவன் = ங்கம்

மிருதங்கம்

8. பேச்சில் சாமர்த்தியமாக அசைவக் கணை யாகத்தில் பெற்றது

அசை(வக் கணை யாக)த்தில்

வக்கணையாக

(நல்ல வக்கணையா பேசு!)

11. மன்மதருடன் கொஞ்சம் கலந்தவன் நியாயத்தை மதிப்பவன்

தருமன்

12. பிறரை சேராமல் பனித் துளியுடன் பறவை போல் தாவு

பறவை போல் தாவு - தத்து

பனித் (துளியுடன்)= னி

தனித்து ( பிறரை சேராமல்)

15. துடுப்பை போடு வேதனை தான்

வலி
Vanchinathan said…
பாராட்டுகள் ராஜி! உங்கள் விளக்கங்கள் எல்லாம் சரியே.

நெடு. 1 விடை கோடி ஏன் என்பதற்கான விளக்கத்தை யாரேனும் அளிப்பார்களா?
Raji said…
கோடி என்றால் ஒரு வகை குறிப்பும் ஆகும். (ஒரு கோடி காட்டி இருந்தா இதுல இறங்கி இருக்க மாட்டேனே... )
நீங்க சொன்ன பிறகு தான் குறிப்பு/மதிப்பு இரண்டும் தெரியறது சார்.
Vanchinathan said…

கோடி=குறிப்பு, சரியான விளக்கம்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்