Skip to main content

விடை 3203

இன்று (30/01/2018) காலை வெளிவந்த வெடி:
மக‌தியாழ் வைத்திருப்பவன் நான், திருப்பித் தர உட்படுகிறேன் (4)
இதற்கான விடை: நாரதன்  = நான்  +  ரத (திருப்பித் தர)
(அதனால் நாரதர் என்பது தவறு)
கலகம் விளைவிப்பவன் என்றுதான் முதலில் எழுதினேன். யோசிக்காமலே உடனே விடை எல்லோருக்கும் கிடைத்து சப்பென்று ஆகிவிடுமே. ஆனால் வேறு வழி புலப்படவில்லை.  எடு அபிதான சிந்தாமணியை, புரட்டு அதன் ஏடுகளை.   நாரதர் கையில் வத்திருப்பது கொட்டங்கச்சி வயலின் என்று நினைத்திருந்தேன். அது பேர் மகதியாழாம். பிடி, எடுத்துப்போடு.  படிக்கிறவர்கள் தலைவலி எப்படியாவது தடவிக் கண்டு பிடிக்கட்டும்.

Comments

Ambika said…

'நாரதனஂ' என்ற‌ சரியான‌ விடை அளித்தவர்கள் (43):

6:02:34 ஶ்ரீவிநா
6:02:52 ரா. ரவிஷங்கர்
6:03:04 விஜயா ரவிஷங்கர்
6:04:16 எஸ்.பார்த்தசாரதி
6:04:25 கேசவன்
6:04:27 முத்துசுப்ரமண்யம்
6:07:10 சுபா ஸ்ரீநிவாசன்
6:08:31 விசீ சந்திரமௌலி
6:11:59 லக்ஷ்மி ஷங்கர்
6:14:05 மைத்ரேயி சிவகுமார்
6:15:22 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:15:51 சங்கரசுப்பிரமணியன்
6:18:04 கி.பாலசுப்ரமணியன்
6:18:33 ரமணி பாலகிருஷ்ணன்
6:19:01 சாந்திநாராயணன்
6:28:15 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:35:37 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:40:00 மு.க.இராகவன்
6:44:08 லதா
6:46:27 முரளி
6:53:32 அம்பிகா
6:58:06 ஆர்.நாராயணன்.
7:05:06 ஆர். பத்மா
7:15:53 கு.கனகசபாபதி
7:19:28 திருமூர்த்தி
7:22:38 ராதா தேசிகன்
7:35:38 சித்தன்
7:42:15 ரவி சுப்ரமணியன்
7:44:08 நாதன் நா தோ
7:46:21 ராஜா ரங்கராஜன்
7:51:59 எஸ் பி சுரேஷ்
7:53:00 பினாத்தல் சுரேஷ்
7:54:18 ராஜி ஹரிஹரன்
7:54:28 சதீஷ்பாலமுருகன்
8:00:36 அன்பன்
8:08:03 ரவி சுந்தரம்
8:49:20 மீனாக்ஷி கணபதி
9:14:12 மு க பாரதி
11:17:26 ருக்மணி கோபாலன்
11:30:59 ஸௌதாமினி
14:32:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15:47:14 கே.ஆர்.சந்தானம்
16:56:17 செந்தில் சௌரிராஜன்

************************
Raghavan MK said…



இன்றைய வெடி யில்

" நான்," என்ற சொல்லுக்கு பக்கத்தில் ஒரு காற்புள்ளி (கமா) இட்டு குழப்ப முயற்சித்துள்ளார் ஆசிரியர்!


1.மகதியாழ் வைத்திருப்பவன் நான்,

2.திருப்பித் தர உட்படுகிறேன்

புதிரை இவ்வாறு இரண்டு பகுதியாக பிரித்து அந்த "கமா" நம்மை திசை திருப்ப முயல்கிறது!


முதலில் குழம்பிய நான், பின் தெளிவுற்று விடை கண்டேன்!!


"கமா" வை நீக்கி விட்டு கீழ்கண்டவாறு 2 பகுதியாக பிரித்தால் எளிதே விடை காணலாம்!!

1.மகதியாழ் வைத்திருப்பவன்



2.நான் திருப்பித் தர உட்படுகிறேன்


திருப்பித் தர = ரத (தர reversed)

நான் உட்படுகிறேன் = " ரத " நானுக்குள் நுழைக்கவும்.

எனவே,
நான்+ரத = நாரதன்.

மகதியாழ் வைத்திருப்பவன் = நாரதன்


A nice puzzle indeed, we enjoyed! ☺
Raghavan MK said…



Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

மகதி

makati   --மகதியாழ்--மகதிவீணை, s. A kind of guitar, நாரதன்வீணை. See W. p. 648. MAHAT
Raghavan MK said…
924. தணிகைப் புராணம்


மகதியாழ் முனிவன் வேற்கை வள்ளலை வழிபா டாற்றத் தகவுறுந் தணிகை யோங்கல் சார்பவன் கண்டு தாழ்ந்து பகரரு வளமை சான்ற பாவையை மணக்கும் வண்ணம் புகலுது மென்று வல்லே போந்தனன் றணிகை வெற்பு.



(இ - ள்.) மகதியென்னும் யாழினையுடைய முனிவனாகிய நாரதன் வேற்படையினைக் கையின்கட்கொண்ட வள்ளலாகிய முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யத் தகுதியுற்ற தணிகை மலைக்குச் செல்பவன் (வள்ளி நாயகியாரை வழியிற்) பார்த்து (முருகனைத்) தாழ்ந்து சொலற்கரிய வளங்கள் நிறைந்த பதுமை போல்பவளாகிய வள்ளிநாயகியாரை மணஞ்செய்யும் வண்ணம் சொல்வோம் என்று தணிகை மலையினுக்கு விரைவாகச் சென்றனனென்க.

M k Bharathi said…
திரு இராகவன் விளககம் அருமை

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்