** இன்று ஜனவரி 7, 2018 காலை வெளியான வெடி:
மாடு கட்டும் மரத்துண்டில் வள்ளலைக் கட்டி கல்யாணச் சடங்கிற்கான பாண்டம் (5)
இதற்கான விடை: முளைப்பாரி = முளை + பாரி
கோவலன் கண்ணகித் திருமணத்தில் முளைப்பாலிகை (இப்போது முளைப்பாரி என்று ஆகிவிட்டது) இடம்பெற்றதாகத் தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருமணமச் சடங்கில் மட்டுமின்றி ஊரே கூடி நடத்தும் திருவிழாவாகவும் இது இருக்கிறது. மண் சட்டியில் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்து இருட்டில் நான்கைந்து நாளில் வைத்து முளைகட்டவைத்து ஆடி/பங்குனி மாதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது சில மாரியம்மன் கோயில்களில் நடக்கிறது.
பாரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன்; முளை என்பது சமதரையில் நட்டு வைத்து அடித்து வைக்கப்பட்ட மரக் குச்சி. மாடுகளை இதில் கட்டலாம். ("எலே ஆறுமுவம், கெழக்கால ஒன்னொரு முளைக் குச்சி அடிச்சு வை, காளைக் கன்னை கொட்டாய்ல கட்ட வேண்டாம் வெளியிலே கட்டுவோம்".)
முளைக்குச்சியில் கயிற்றால் கட்டப்பட்ட எருமை |
கூடாரம் அடிப்பதற்கும் இது போல் முளையடித்து அதில் கயிற்றால் கூடாரத் துணியை இழுத்துக் கட்டுவார்கள். ஆங்கிலத்தில் peg, stake என்ற சொற்கள் இதற்கு ஈடானவை.
Comments
முளைப்பாரி
திருமணம் போன்ற சுபச்சடங்குகளில் வைக்கப்படும் முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம்.
நவதானியப் பயிர்கள் நிறைந்த மட்பாண்டங்களை எடுத்துச்சென்று ஆறு, குளம் போன்றவற்றில் விடும் திருவிழா.
ஒரு பானையில் மண் நிரப்பிஅதில் தட்டாம் பயறு, பாசிப்பயறு முதலிய நவதானியங்களின்
விதைகளைநெருக்கமாகத்தூவி, அதை வெயில் அதிகம்படாத ஒரு இடத்தில்நாலைந்துநாட்களுக்குவைத்துவிடுவார்கள். தினமும் பானையில்இருக்கும் மண்ணிற்கு நீர்ஊற்றி வருவார்கள். எனவே, பயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும். இப்பானையை நோன்பிருந்துகோயிலுக்குஊர்வலமாகஎடுத்துச் செல்வார்கள். இதையே 'முளைப்பாரி' என்கிறார்கள்.

சரியான விடை அனுப்பியவர் (25)
1/7/2018 7:17 லக்ஷ்மி ஷங்கர்
1/7/2018 7:23 கி,பாலசுப்ரமணியன்
1/7/2018 7:24 மு.க.இராகவன்
1/7/2018 7:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/7/2018 7:26 அம்பிகா
1/7/2018 7:28 மீனாக்ஷி கணபதி
1/7/2018 7:36 சங்கரசுப்பிரமணியன்
1/7/2018 7:37 முத்துசுப்ரமண்யம்
1/7/2018 7:52 ரமணி பாலகிருஷ்ணன்
1/7/2018 7:57 பினாத்தல் சுரேஷ்
1/7/2018 7:57 செந்தில் சௌரிராஜன்
1/7/2018 8:08 ரங்கராஜன் யமுனாச்சாரி
1/7/2018 8:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/7/2018 8:28 கு. கனகசபாபதி , மும்பை
1/7/2018 9:05 தேன்மொழி
1/7/2018 9:06 மு கபாரதி
1/7/2018 9:20 ஜீவமோகன்
1/7/2018 10:59 ஹரி கிருஷ்ணன்
1/7/2018 12:23 ராஜி ஹரிஹரன்
1/7/2018 12:24 Thi Po Ramanathan
1/7/2018 12:43 ஏ.டி.வேதாந்தம்
1/7/2018 12:43 பத்மாசனி
1/7/2018 14:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/7/2018 15:35 நாதன் நா தோ
1/7/2018 18:09 சுந்தர் வேதாந்தம்
முடிவு
அலைந்து ஒரு”சடங்குகள்” பற்றிய கட்டுரையில் முளைப்பாரி என்ற சொல்
கண்டேன். அதிலும் முளைப் பாரி என்றால் என்ன என்று தெளிவாக இல்லை.
பல அகராதிகளில் (முக்கியமாக தமிழ் வர்சுவல் யுனிவர்ஸிடி மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் - எனக்குத் தெரிந்து பல்கலைக் கழகங்களால்
தயாரிக்கப் பட்டவை), தேடியும் முளைப்பாரி என்ற சொல் இல்லை. க்ரியா அகராதியில் முளைப்பாரி என்ற சொல்லுக்கு 6 பயன்பாட்டு (வாக்கிய) உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருந்தன; பொருள்? ம்ம் ஹூம் - கிடையாது. மேலே குறிப்பிட்ட கட்டுரையின் விளக்கமும், புதிரின் கட்டமைப்பும், முளை, முளைப் பயிறு பற்றிய அறிவும் எல்லாம் சேர்ந்து முளைப்பாரி தான் விடையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்! விடை அனுப்பி ”இளைப்பாறி”னேன்
https://ta.oxforddictionaries.com/முளைப்பாரி
முளைப்பாரி
பெயர்ச்சொல்
1
(திருமணம் போன்ற சடங்குகளில் வைக்கப்படும்) முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம்.
2
நவதானியப் பயிர்கள் நிறைந்த மட்பாண்டங்களை எடுத்துச்சென்று ஆறு, குளம் போன்றவற்றில் விடும் திருவிழா.
‘நாளைக்கு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி’
இங்கும் பார்க்கவும்: https://www.facebook.com/Thirumangalam/posts/1134124036608617
https://www.vikatan.com/pasumaivikatan/2017-apr-25/current-affairs/130253-mulaipari-festival.html
முளைப்பாரியை திருமண சடங்கில் வைப்பார்கள்!
ஆனால் அதற்கு விழா எடுப்பார்கள் என்பது தற்போது தான் தெரியும்