Skip to main content

விடை 3174

இன்று காலை (02 ஜனவரி 2018) வெளியான உதிரிவெடி 3174:

சைவர்கள் வணங்கும் தென்னமெரிக்க நாட்டு மிருகம் ? (4)

இதற்கான விடை: பெருமான் (பெரு, ஒரு தென் அமெரிக்க நாடு)

"பெருமான்"  பெரும்பாலும் சிவன் பெயருடனும் சில சமயம் முருகன் பெயர் பின்னும்  பயன்படுத்தப்படுகிறது.

Comments

Ambika said…
3174: பெருமான் விடையளித்தவர்கள்:
ரவி சுப்ரமணியன், ஏ.டி.வேதாந்தம், பத்மாசனி, சங்கரசுப்பிரமணியன், சதீஷ்பாலமுருகன், ரவி சுந்தரம், சுந்தர் வேதாந்தம், கேசவன், நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், அம்பிகா, எஸ்.பார்த்தசாரதி, நாதன் நா தோ
தொகுத்ததற்கு நன்றி. But it looks like lot of work compared to simply deleting wrong answers and posting the link to the spreadsheet. ஆரம்ப நாட்களில் ஆசையாக செய்து விடுவோம். பின்னால் பளு அதிகம் என்று தோன்றினால், எது எளிதோ அதை செய்யுங்கள்.
Vanchinathan said…
இன்று தாமதாமாக இரவு எட்டரை மணிக்குதான் கூகிள் படிவம் வந்ததால் நிறைய பேர் விடையளிக்க முடியவில்லை. அதனால் அப்படியே பெயரை இடுவது சாத்தியமாகிவிட்டது. நாளையிலிருந்து பட்டியலுக்கான உரலைத் தந்தால் போதும். எல்லோரும் விடையளித்த நேரமத்தை வினாடிக் கணக்கில் பார்த்து மகிழலாம்!
Chittanandam said…
பெரு அல்லது சிலி என்று தெரிந்துவிட்டது. அவ்விரு எழுத்துகளுடன் எதை எதையெல்லாமோ இணைத்துப் பார்த்தேன். என் சிற்றறிவுக்கு மான் புலப்படவில்லை.
வாஞ்சி, வாழ்க நீ எம்மான்!
Sridharan said…
ஆருத்ரா தரிசனம் அன்று, சிவபெருமானை நினைக்க வேண்டும் என்று உணராமல் நந்தி தேவரை வைத்துக்கொண்டு தென்அமெரிக்காவில் அலைந்தேன். ஓம் நமசிவாய.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்