Skip to main content

விடை 3202

இன்று காலை வெளியான வெடி
குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் உதாரணங்களாக ச, ரி, க, ம, ப, த, நி (3)

இதற்கு சற்றே குறைவாக எழுதியிருந்தாலும் விடை கண்டுபிடித்திருக்கலாம்.
குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் (3).
ஏதோ கொஞ்சம் உதாரணம் கொடுத்து  விளக்கி மக்களுக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமாக்கலாம் என்ற எண்ணத்தில்  ச, ரி, க, ம, ப, த, நி சேர்த்தேன்.


இப்போது விடை கொடுத்துவிடுகிறேன்: குறில்.  சரியான விளக்கத்தை நீங்கள் எவரேனும் கருத்துரையாக அளிக்கலாம்.

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
This comment has been removed by the author.
Muthu said…
ச, ரி இதெல்லாம் உதாரணங்கள். சா, ரீ,கா,மா...,நீ எல்லாம் தமிழ் இலக்கணத்தில் என்ன பெயர்? இதோட குழல் முடியும் (”ல்”) முன் அடையாளம் (= 2 எழுத்து வார்த்தை) வைத்து விடை போட்டேன்.
Muthu said…
ச, ரி .... எல்லாம் “குறில்” (நெடில் இல்லை); குழல் முடியும் (”ல்”) முன் அடையாளம் (= குறி) ==> குறில்
Raghavan MK said…

மதியம் 14.14 க்கு விடையளித்தேன்
என்பெயர் விடுபட்டுள்ளது
Raghavan MK said…



மதியம் 14.14 க்கு விடையளித்தேன்
என்பெயர் விடுபட்டுள்ளது
Raghavan MK said…
இன்றைய வெடி
இரயில் வண்டி நீளம்.
போததற்கு "சரிகமபதநி"
போட்டு சுரத்தை வரவழைத்து குழப்பி திசை திருப்ப வைத்தது! எப்படியோ நான் மாட்டாமல் தப்பித்தேன்!
Ambika said…
மன்னிக்கவும் 2 பெயர்கள் விட்டுப்போய்விட்டன.
சரியான‌ விடை அளித்தவர்கள் (21):

6:02:26 லக்ஷ்மி ஷங்கர்
6:05:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:07:30 கேசவன்
6:08:08 ரவி சுப்ரமணியன்
6:19:32 திருமூர்த்தி
6:32:22 சித்தன்
6:33:30 கி.பாலசுப்ரமணியன்
6:39:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:56:18 வி ன் கிருஷ்ணன்
7:09:37 சுபா ஸ்ரீநிவாசன்
8:22:38 முத்துசுப்ரமண்யம்
9:35:40 மைத்ரேயி சிவகுமார்
10:09:33 ராஜி ஹரிஹரன்
10:30:13 பாரதி
10:47:32 மீ கண்ணன்
11:03:26 தேன்மொழி
12:06:48 எஸ் பி சுரேஷ்
14:14:10 மு.க.இராகவன்
15:09:42 விஜயா ரவிஷங்கர்
20:22:58 அம்பிகா
20:37:02 ரா. ரவிஷங்கர்

******************
Vanchinathan said…
நெடிய ரயில் வண்டியைக் கடந்து சரியான குறுகிய விடையளித்த 21 பேருக்கும் பாராட்டுகள்! முத்து சுப்ரமண்யம் அளித்துள்ள விளக்கம் பொருத்தமானது.
Vanchinathan said…
மு.க.ராகவன் பதிலளிக்கும் போதே சரியான விளக்கத்தையும் அளித்திருந்தார்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்