தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
6:03:25 லக்ஷ்மி ஷங்கர்
6:04:17 எஸ்.பார்த்தசாரதி
6:04:28 சங்கரசுப்பிரமணியன்
6:07:11 கேசவன்
6:11:12 ஶ்ரீவிநா
6:12:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:14:31 முத்துசுப்ரமண்யம்
6:21:05 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:34:20 ரவி சுப்ரமணியன்
6:35:11 விசீ சந்திரமௌலி
6:45:56 மீனாக்ஷி கணபதி
7:01:04 சித்தன்
7:10:34 எஸ் பி சுரேஷ்
7:19:09 கு.கனகசபாபதி, மும்பை
7:30:44 ராஜி ஹரிஹரன்
7:36:45 ஆர்.நாராயணன்.
7:52:49 நங்கநல்லூர் சித்தானந்தம்
8:04:16 சந்திரசேகரன்
8:16:37 சுந்தர் வேதாந்தம்
8:18:38 ரவி சுந்தரம்
8:33:40 ராதா தேசிகன்
8:36:27 ஜீவமோகன்
9:10:08 மு.க.இராகவன்
9:39:58 மரு. ப. சந்திரமொளலி
11:27:29 ஸௌதாமினி
12:27:57 தேன்மொழி
13:58:07 அம்பிகா
14:09:29 முரளி
14:34:01 ராஜி பக்தா
14:47:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15:04:10 லதா
17:54:28 செந்தில் சௌரிராஜன்
18:00:41 நாதன் நா தோ
20:01:14 கி.பாலசுப்ரமணியன்
20:03:30 ராஜா ரங்கராஜன்
*********************
மகுடம் = முடி
எ.கா.-> முடி சூடும் விழா.
எதற்காக=ஏன்
எதற்காக மகுடம்? =முடி +ஏன் =முடியேன்
திரௌபதியின் சூளுரை = (கூந்தலை) முடியேன் .
பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.