Skip to main content

விடை 3651

இன்று காலை வெளியான வெடி
ஒரு விலங்கிடம் கருணை காட்டும் குணம்  (4)
இதற்கான விடை: மானிடம்

மானுடம் என்றும் என்றும் இது எழுதப்படுகிறது.  நம் புதிர் மான் இடம் போயிருப்பதால்  அதுதான் பொருத்தம். (இன்னொருநாள் மானுடம்தான் சரியான விடையென்று அது போல் புதிராக்கும் உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!)

பாகுபாடில்லாமல் மனிதர்கள் தெரியாதவர்களுக்கும் கருணை காட்டி உதவும்போது  மானிடம் (மனிதத்தன்மை)  அங்கே வெளிப்படுகிறது என்கிறார்கள். மதம், இனம், மொழி போன்ற பாகுபாடில்லாமல் செய்யப்படும் காரியத்திற்கே இச்சொல் பயன்பட்டாலும்,  அது கருணையினால் உதவும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ("நானும் மனிதன்தானே எனக்கும் எல்லோரையும் போல் ஆசையிருக்காதா" என்று சொல்லும்போது அதை மனிதத்தன்மை/மானிடம் என்று  குறிப்பிடுவதில்லை).
 வலையில் தேடிய போது ஒரு கவிதை அகப்பட்டது, உதாரணத்துக்கு என்னுடைய வெண்பாவையே அளிப்பதற்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு இது.

கவிஞர் ஹரிகிருஷ்ணன் நடத்தும் ஈற்றடி என்றும் இனிப்பு என்ற  வாட்ஸப்குழுவில் முணுக்கென்றால் முப்பது வெண்பாவை வடிக்கும் ஆஸாத், சங்கரசுப்ரமணியன், சின்னக் கண்ணன், மாலா  போன்ற வல்லவர்கள்  இருக்கிறார்கள். அவர்கள் வெண்பாவில் புதிருக்குப் பொருத்தமானது  இருந்தால் தேடியெடுத்து அவர்கள் அனுமதியுடன்  வெளியிடுகிறேன்.

இன்று காலை வெளியிட்ட வெடிக்கு விடையளிக்கும் படிவத்திற்கும் கீழே சென்று பார்த்தால் பல ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளைக் கூறியிருப்பதைக் காணலாம்.   உங்கள் ஆர்வம் எனக்கும் பற்றிக் கொள்கிறது நன்றி.

இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இதைச் சொடுக்கவும்.




Comments

சங்கரசுப்பிரமணியன் said…
நன்றி வாஞ்சி சார்! இன்றைய புதிர் விடை விளக்கத்தில் வெண்பாக் குழுவையும் அதிலும் எங்களை ஊக்குவித்துக் கூறிய உங்கள் ஊக்க மொழிகளுக்கும் மிக்க நன்றி!
Raghavan MK said…
நீர் உதிர்க்கும் வெடிகளில்
சதிராடும் கூட்டம் நாங்கள்
ஈரடி வைத்து நடை பயின்று
முற்றத்தில் முத்தாடி பின்
மூவர் உலா காண வரும்
வாஞ்சியின் குழவி உதிரிவெடி
வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்!
Vanchinathan said…
@ சங்கர சுப்பிரமணியன்: நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்போதாவது விடைச் சொல் கொண்ட வெண்பா அகப்பட்டால் இங்கே பயன்படுத்த அனுமதியாய் உங்கள் பதிலைக் கொள்கிறேன்,ர

@ மு.க.ராகவன்: நன்றி. முற்றத்தில் வீட்டில் இருப்பவர் மட்டும் பார்க்கும்படி வாட்ஸப்பில் நடை பயின்ற உதிரிவெடி இன்னமும் தெருவெங்கும் பலரும் பார்க்க உலாவும்படி வளர வைக்கும் நோக்கத்தில் இணையத்தில் வலைப்பதிவாய்க் கொண்டு வந்தேன்.

அதனால், குழு உறுப்பினரன்றி எவரும் ரசிக்கலாம். புதியதாய் நான் அறியாதவர்கள் வந்துகொண்டிருப்பதிலிருந்து தெரிகிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.