Skip to main content

உதிரிவெடி 3650

உதிரிவெடி 3650 (ஏப்ரல் 23, 2019)
வாஞ்சிநாதன்
****************

இன்று மூன்றாமாண்டை  உதிரிவெடி தொடங்குகிறது.  இவ்வளவு நாளும் தொடர்ந்து வந்து புதிரின் விடைகளைக் கண்டுபிடித்து வரும் அனைவருக்கும் பாராட்டுகள்.   வாட்ஸப் குழுவில் தமிழ் எழுத வசதியிருக்கிறதாமே என்று தெரிந்தபின் கொஞ்ச நாட்கள் ஒரு குழு அமைத்து அதில் புதிர்களை அனுப்பலாமா என்று எண்ணித் தொடங்கினேன். இருபது பேருடன் தொடங்கிய குழுவில் இரண்டு மாதங்கள் நான் புதிர் அளிக்க முடியும் என்று அப்போது நினைத்திருந்தேன்.   உங்கள் ஆர்வத்தாலும், நான் கஷ்டமான புதிர் என்று நினைத்தாலும் பத்து நிமிடத்தில் (சில சமயம் அதே நிமிடத்தில்!)  விடையை அளிக்கும்  வல்லவர்களாலும் உந்தப்பட்டு வாட்சப்பிலிருந்து வெளிவந்து வலைப்பதிவாக  அளித்து வருகிறேன். இதன்  நோக்கம் எனக்குத் தெரிந்தவர்கள் மட்டும்தான் புதிரை ரசிக்க வேண்டுமென்பதை மாற்ற. எனவே உங்கள் நண்பர்களையும் அழைத்துப் புதிர்ப்பக்கம் வரச் சொல்லுங்கள்.

இந்த பிறந்த நாளில்  எல்லோரும் அவர்களவர்கள் வீட்டில்  பாயசம் செய்து சாப்பிட்டுக் கொண்டாடுங்கள்.
நேற்று வேட்டியே இல்லாதவன் கதை. இன்று கொஞ்சம் முன்னேற்றம், அரைகுறை ஆடைக்காரன் வருகிறான் பராக், பராக்:

பொறுப்பின்றி வயலின் வாசித்தவன் அரை ஆடையுடன் குளிக்க வந்த இடம்? (3)


Comments


இப்பணி மேலும் பல்லாண்டு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Ramki Krishnan said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி மேலும் தொடரட்டும்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.