Skip to main content

உதிரிவெடி 4038-4061

உதிரிவெடி 4038-4061 (மார்ச் 31, 2020)
வாஞ்சிநாதன்
*******************
இன்று மொத்தம் 24 வெடிகள் உள்ளன. இதில் 24 அல்லது 23 அல்லது 22ஐ உதிரியாவே வெடித்து, கட்டத்தை வெளியிடும் முன்னே சரியான விளக்கங்களுடன் விடையனுப்புவோர்க்கு முறையே 24 கேரட், 23 கேரட், 22 கேரட் தங்கப் பதக்கங்களை அளிக்க நான் ஆசைப்படுகிறேன்.

அதை  vanchinathan அட்  ஜிமெயில் டாட் காம் என்ற  முகவரிக்கு  இந்திய நேரப்படி 31 மார்ச் மாலை நாலரை மணிக்கு  முன்பு அனுப்பவும். மாலை 5 மணிக்கு வலைக்கட்டங்கள் வெளியிடப்படும். (இன்று விடையளிக்க கூகிள் படிவம் கிடையாது).  இருபத்திரண்டுக்கும் குறைவான விடைகளைக்  கண்டுபிடித்தோர் 5 மணிக்குப் பிறகு  வலைக்கட்டம் நிரப்பி மிச்சத்தையும் கண்டுபிடித்து, பழைய முறையில் அனுப்பவும்.

நெட்ப்ளிக்ஸ், அமேசான் என்று  10 நாட்களாகத் திரைப்படங்களையே பார்த்து வேறு மாறுதலான விஷயம் வேண்டும் என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். இதுதான் தக்க தருணம், அவர்களை இவ்வெடிப்பக்கம் வந்து ஒரு கை பார்க்கச் சொல்லுங்கள்.
அதிகமான வெடிகள் இருப்பதால் விடைகள்  புதன் இரவோ (அல்லது வியாழன் இரவோ) வெளியிடப்படும்.

இரண்டு குறிப்புகள் "கோடிட்ட இடத்தை நிரப்புக" என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 


~~~~~~~~~~~ **************** ~~~~~~~~~~~~~~~~~ குறுக்காக
1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4)
3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக
     இருக்கும் சமயம்
(6)
 8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி
     உருவாக்கும்  அமைப்பு (6)
 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3)
12. கவனமாக  வாத்து தலை சீவி  இன்னொரு பறவையிடம் புகுந்தது (6)
14. பாரதியார் தலை சீவி மயக்க  விதேசி மயங்கினாள் (6)
16. ரேவதிக்கு ஐந்து, லலிதாவுக்கு ஆறு (3)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
22.  இரவோடிரவாகப்  பாடு! (4)

நெடுக்காக
 1. புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)
 2. உயர்ந்த இழை உரசி புத்தகம் (3, 2)
 4. ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)
 5. ஒழுங்கு மாற  ஆரம்பமின்றி  காந்தி கடலை வறுத்தார் (5)
 6. தொலைக்காட்சித்  திரைக்கு வந்த ஒரு நட்சத்திரம் (4)
 7. வாய்பாடு தெரிந்தவர்களால் போட முடியும் நெஞ்சில் ஒரு திட்டம் (7)
10. இலட்சணமான பெண்  இதுபோல் இருப்பாள் என்று    
      கத்தியைப்  பிரயோகித்து  விவரி
(3, 4)  
13. _____ சிறைவாசம்  ஏனென்றால் வனவாசம் (6)
15.  அசையாமல்  இடையொடியப்  போகவில்லை சிறுவன் காலின்றித்
        தடுமாற்றம்
(2, 3)
16.  பணத்தாசையில் முதலாளிகள் செய்வது  துளி ரசம் கலந்து
       கடலையால் செய்தது
(5)
17.   காற்றில் கரைந்து முதல்வர்கள் ஆண்டவனிடம் விண்ணப்பித்தால்
        யாருக்கும் கிடைக்கும்
(4)
20.  திருவள்ளுவருக்கு ஒரு கண் (2)
  
~~~~~~~~~~ ******** ~~~~~~~~~~~~


Comments

நாங்கள் ஆர்வத்துடன் வரவேற்கிறோம்!
வாய்பாடு orவாய்ப்பாடு?
Across no.8, is it seven letters?
Vanchinathan said…
@கனகசபாபதி: 8 குறு. குறிப்பிட்டுள்ளவாறு ஆறு எழுத்துகள்தான்.

@ வி என் கிருஷ்ணன்: 4 x 7 = 28, F=ma, நிரைநேர் = புளிமா, இதெல்லாம் வாய்பாடு
வாய்ப்பாட்டு = vocal singing

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்