Skip to main content

சரவெடி 31 மார்ச் 2020


சரவெடி 31 மார்ச் 2020
வாஞ்சிநாதன்
****************** 

கட்டங்கள் வரும் முன்பே (4.50 மணி வரை) விடை கண்டுபிடித்தவர்கள்:

எல்லா (24)  விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்த 4 பேர்:
பா. நடராஜன்
கேசவன்  
ராம்கி கிருஷ்ணன்
எஸ் பி சுரேஷ்   (விளக்கங்கள் அனுப்பவில்லை)

இருபத்திமூன்று சரியான  விடைகளை அனுப்பிய 5 பேர்:

கதிர்மதி
சதீஷ்பாலமுருகன் 

நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர்
ஆர் பத்மா
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன்  

இருபத்திரண்டு சரியான விடைகள் கண்டுபிடித்த மூவர்:
வானதி
உஷா
எஸ் ஆர் பாலசுப்ரமணியன்
 
இதில்  நடராஜன், ராம்கி கிருஷ்ணன், டாகடர் ரமகிருஷ்ண ஈஸ்வரன்  இம்மூவரும் விடைகளோடு புதிர்கட்டங்களையும்  சரியாக  கணித்து அனுப்பியிருந்தனர்.

~~~~~~~~~~~~~~~ ********************** ~~~~~~~~~~~~~~~~~~

சரி இதோ மீண்டும்  இதே புதிர், சரவடிவில் (இன்னொரு இடுகையில் செயலியுடன் இருக்கிறது)





குறுக்காக‌
1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4)
3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக
     இருக்கும் சமயம்
(6)
 8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி
     உருவாக்கும்  அமைப்பு (6)
 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3)
12. கவனமாக  வாத்து தலை சீவி  இன்னொரு பறவையிடம் புகுந்தது (6)
14. பாரதியார் தலை சீவி மயக்க  விதேசி மயங்கினாள் (6)
16. ரேவதிக்கு ஐந்து, லலிதாவுக்கு ஆறு (3)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
22.  இரவோடிரவாகப்  பாடு! (4)

நெடுக்காக
 1. புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)
 2. உயர்ந்த இழை உரசி புத்தகம் (3, 2)
 4. ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)
 5. ஒழுங்கு மாற  ஆரம்பமின்றி  காந்தி கடலை வறுத்தார் (5)
 6. தொலைக்காட்சித்  திரைக்கு வந்த ஒரு நட்சத்திரம் (4)
 7. வாய்பாடு தெரிந்தவர்களால் போட முடியும் நெஞ்சில் ஒரு திட்டம் (7)
10. இலட்சணமான பெண்  இதுபோல் இருப்பாள் என்று    
      கத்தியைப்  பிரயோகித்து  விவரி
(3, 4)  
13. _____ சிறைவாசம்  ஏனென்றால் வனவாசம் (6)
15.  அசையாமல்  இடையொடியப்  போகவில்லை சிறுவன் காலின்றித்
        தடுமாற்றம்
(2, 3)
16.  பணத்தாசையில் முதலாளிகள் செய்வது  துளி ரசம் கலந்து
       கடலையால் செய்தது
(5)
17.   காற்றில் கரைந்து முதல்வர்கள் ஆண்டவனிடம் விண்ணப்பித்தால்
        யாருக்கும் கிடைக்கும்
(4)
20.  திருவள்ளுவருக்கு ஒரு கண் (2)

Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்