Skip to main content

விடை 4006


இன்று காலை வெளியான வெடி:

ஒரு வீட்டில் வாழ்பவர்கள், ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி (5)

அதற்கான விடை: குடும்பம்= கும்பம்  + டு
கும்பம் =  ஜோதிடத்தில் சொல்லப்படும் 12 ராசிகளில் ஒன்று
டு = ஆடு - ஆ (மாடு)

ஆடு மாடு நுழைவது இப்புதிரில் இரண்டாவது முறை. ஏற்கனவே 2017 இல் இதைப் பயன்படுத்தியுள்ளேன்.





(பத்து ஆடு மாடு போனதும் உள்ளே சென்று தொந்தரவு கொடு (4)  )

ஏன் குடும்பத்தில் ஆடு, மாடு நுழைகிறது என்று கேட்காதீர்கள். ஆமையோ, அமினாவோ நுழையவில்லையே.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
ஆடு, மாடு இவையிரண்டும் முதலிரண்டு ராசிகளின் சின்னங்கள், ஆயினும் புதிரில் வந்துள்ள ராசியோ கும்பம். குழப்புவதற்கென்றே வந்தாலும் ஆடு, மாடு இவையிரண்டையும் நன்றாக இணைத்து ஒடவிட்டு, நம்மையும் ஆடவிட்டிருக்கிறார் ஆசிரியர்! !
(ஒரு ராசி என்று குறிப்பிட்டிருக்கலாமே!)
*************************
ஒரு வீட்டில் வாழ்பவர்கள், ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி (5)

ராசி = கும்பம்
மாடு = ஆ

ஆடு, மாடு போய்
= ஆடு-ஆ = டு
(ஆடு இதில் ஆ போக இருப்பது டு)

ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி
= கும்பம் இதில் நுழைந்த டு
= குடும்பம்

= ஒரு வீட்டில் வாழ்பவர்கள்
*************************
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
*************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்