இன்று காலை வெளியான வெடி:
வளைந்து நெளிந்த மயில் அடங்கியதும் மூலவர்க்கு தீபாராதனைபோது கேட்கும் (3, 2)
அதற்கான விடை: கோயில் மணி = கோணி + மயில்
வளைந்து = கோணி
நெளிந்த மயில் = யில் ம
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
*************************
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
அதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும்போதெல்லாம் ஒரு விதமான தனி உணர்வை அடைகிறோம்.
*************************
வளைந்து நெளிந்த மயில் அடங்கியதும் மூலவர்க்கு தீபாராதனைபோது கேட்கும் (3, 2)
வளைந்து = கோணி
நெளிந்த மயில் = யில்ம
அடங்கியதும் =கோ[ யில்ம ]ணி
மூலவர்க்கு தீபாராதனைபோது கேட்கும்
= கோயில் மணி
*************************
மயில் வேறு பெயர்கள்!
சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்
*************************