இன்று காலை வெளியான வெடி:
எதிர்ப்புற வழி வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5)
அதற்கான விடை: அழிவற்ற = அற்ற + ழிவ
அற்ற = இல்லாத
ழிவ = எதிர்ப்புற வழி
அழிவற்ற தன்மை எப்போதும் நிலைத்திருக்கும்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
அருமையான கட்டமைப்புடன் கூடிய புதிர்.
விடை பெயர்ச்சொல்லா அல்லது பெயரெச்சமா ,என முதலில் குழப்பம் தோன்றியது.
_" *தன்மை* எப்போதும் நிலைத்திருக்கும்"_ என்பதை
_"எப்போதும் நிலைத்திருக்கும் *தன்மை* "_
என்று மாற்றி வாசிக்க, *அழிவற்ற தன்மை* என பொருள் வரவே, குழப்பமும் தீர்ந்து விடையும் கிடைத்தது!
*************************
_எதிர்ப்புற வழி வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5)_
_எதிர்ப்புற வழி_
= *வழி--> ழிவ*
_இல்லாத_ = *அற்ற*
_வெளியே இல்லாத_
= _வெளியே *அற்ற* , உள்ளே *ழிவ*_
= *அழிவற்ற*
_எப்போதும் நிலைத்திருக்கும் தன்மை_
= *அழிவற்ற*
*************************