Skip to main content

விடை 3996

இன்று காலை வெளியான வெடி:
வழியில் யமன் தலையிட்டு குற்றம்  நடந்ததன் அறிகுறி (4)
அதற்கான விடை: தடயம் = தடம் + ய‌
தடம் = வழி
ய = யமன் தலை.
இன்று அறுபதுக்கும் அதிகமானவர்கள் சரியாக விடையைக் கண்டு பிடித்து விட்டார்கள்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

தடயம் என்றாலே அறிகுறி என்று பொருள் கொள்ளலாம்.

"குற்றம் நடந்ததின் " புதிர் ஆசிரியர் போனா போகட்டும் பொழச்சு போறாங்க ன்னு பெரிய மனசு பண்ணி கொஞ்சம் மேல போட்டு கொடுத்திருக்காரு.

துப்பு ன்னு போட்டிருந்தான்னா உமிழ் ன்னு பொருள் கொண்டு இன்னும் கொஞ்சம் பொழுது போக்கி இருக்கலாம்.
Vanchinathan said…
சரி இன்னைக்கு கொஞ்சம் கொறைச்சு கொடுத்துட்டா போச்சு