Skip to main content

விடை 4000


இன்று காலை வெளியான வெடி:

பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5)
அதற்கான விடை: பாரதியார் = பார் + ரதியா
பார் = உலகு
ரதியா = மிகவும் அழகானவளா

"உலகிலே" என்றது "பார்" என்ற சொல்லுக்குள் "ரதியா" என்ற சொல்லை இட வேண்டும் என்பதற்கு

பாரதியார் பெண்விடுதலையைக் கொண்டாடும் கும்மிப் பாட்டில்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்" என்று எழுதியுள்ளார்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம.

இன்று எண் வரிசையில் புதிர் நாலாயிரத்தை எட்டியுள்ளது.
இப்படி எண்ணிட  ஆரம்பித்தது  ரவி சுந்தரத்தின் உந்துதலால் ஜூலை 2017இல்.
அன்று வரிசை எண் 3000 என்று குறிப்பிட்டேன்.

அதற்கு முன் 3 மாதங்கள் தினசரி வாட்ஸப்பில் வந்த புதிர்களையும்,  தென்றல் பத்திரிகையிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் 1999லிருந்து 2012 முடிவு வரை வெளிவந்த    210க்கும் மேற்பட்ட முழு வலைக்கட்டப் புதிர்களையும் தோராயமாக 2999 என்று வைத்துக் கொண்டேன்.

இன்று 4000 என்ற எண்ணை எட்டியதைச் சற்றே அடக்கமின்றி  பொன்னெழுத்துகளில் காட்டியதைக் கூர்ந்து கவனித்து அதற்குப் பாராட்டு தெரிவித்துக் கருத்து வெளியிட்ட  சித்தானந்தம்,  நா.தோ. நாதன், அம்பிகா,  பெயரிலி,  ஆர்கே இ,  ரவி சுந்தரம்  ஆகிய   ஏழு பேருக்கும் நன்றி.

ஒரு பழைய ஆனந்த விகடன் ஜோக்:
நள்ளிரவில் மனைவி: என்னங்க அடுப்பங்கறையில் ஏதோ சத்தம் கேக்குதே, திருடனா என்னன்னு போய் பாத்துட்டு வாங்க.

கணவன்: அது ஏதாவது பூனை பாத்திரத்தைத் தட்டி விட்டிருக்கும். திருடன் எவனாவது இப்படி சத்தத்தைக் கிளப்புவானா?

மனைவி (அரை மணி கழித்து):  என்னங்க அரை மணியா ஒரு சத்தமும் வரலையே, திருடன் வந்திருக்கானான்னு பாத்துட்டு வாங்க



Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.