இன்று காலை வெளியான வெடி:
பாதிக் கோவில் முன்னே நெடுங்காலம் சேவை (4)
அதற்கான விடை: ஊழியம் = ஊழி + யம்
ஊழி = நெடுங்காலம் (யுகம்)
யம் = (ஆல) யம்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
**************************
தமிழ் ஊழி யின் அர்த்தம்
ஊழி
பெயர்ச்சொல்
உயர் வழக்கு
1 நீண்ட காலம் நிலைக்கும் ஒரு கால அளவு; யுகம்.
‘ஊழியின் முடிவே வந்துவிட்டது போல் இருந்தது’
2 யுக முடிவு.
‘சிவனின் ஊழித் தாண்டவம்’
‘ஊழிக் காற்று’
**************************
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
குறள் 989
பொருள்
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
**************************
பாதிக் கோவில் முன்னே நெடுங்காலம் சேவை (4)
பாதி கோவில் = (ஆல)யம் = யம்
நெடுங்காலம் = ஊழி
பாதிக் கோவில் முன்னே நெடுங்காலம் = யம் முன்னே ஊழி
= ஊழியம்
சேவை = ஊழியம்
**************************