இன்று காலை வெளியான வெடி:
நேர்மையிலிருந்து விலகி வாய்மை இடையே துறந்த கலவை (3)
அதற்கான விடை: சாந்து = சாய்ந்து - ய்
சாய்ந்து = "நேர்"மையிலிருந்து விலகி
ய் = வாய்மை இடை
கட்டிடத்தொழிலாளர்கள் சுவர் எழுப்பும்போது செங்கல் அடுக்கிப் பூசுவதற்கான சாந்தை இவ்வாறு கலவை என்றும் சொல்வதுண்டு .
இரண்டு நாட்களாகப் பேருந்துகள், ரயில் வண்டிகள் இயக்கப் படாததால் கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலைத் தொழிலாளர்கள், 300, 400கி.மி. நடந்தே செல்வதைத் தொலைக்காட்சியில்
காட்டுகிறார்கள்.
சுண்ணாம்பு சாந்து கலவை சுவரெழுப்பி
அண்ணாந்து பார்க்கும் அதிசய கட்டிடம்
மண்ணில் பலர்வியக்கக் கட்டும் மாந்தரெலாம்
இந்நாளில் வாடுவதும் ஏன்?
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
சிக்கலான புதிர் இன்றையது!
சிக்குடைப்பதிற்குள் சூரியஸ்தமனம் நெருங்கி வர நேர்வழியிலிருந்து விலகி, குறுக்கு வழியில் கலவையை தஞ்சமடைந்தேன்.
கட்டிட கலவையை சாந்து எனக்கூறுவது எனதெண்ணத்தில் தெறித்தது.
பின் வாய்மை இடையான "ய்" ஐ சாந்தில் கலந்து reverse gear போட அது குடை சாய்ந்து போகாமல் நேர்மையிலிருந்து விலகி வழி காட்டியது.
எ.கா :
என்னப்பா? நீ நியாயத்தை நேர்மையாய் எடுத்து சொல்லாமல் விலகி அவங்க பக்கம் சாய்ந்திட்டியே!!
இது எப்படியிருக்கு!!
( நான் புதிராசிரியர் பக்கம் சாய்ந்ததாக யாரும் கூறுவதற்குள் ஓடிவிடுகிறேன்.!
🏃🏃🏃🏃)
*************************
நேர்மையிலிருந்து விலகுவது
என்றால், ஒரு பக்கம் சார்ந்து (சாய்ந்து) செயல்படும் வெளிப்படையான புறக்கணிப்பு என்று பொருள்.நெறி தவறி ஒருபக்கத்திலே பற்று வைத்தல், ஒரு தலைப்பட்சமான நடத்தை
*************************
நேர்மையிலிருந்து விலகி வாய்மை இடையே துறந்த கலவை (3)
நேர்மையிலிருந்து விலகி
= சாய்ந்து
வாய்மை இடையே = ய்
துறந்த = சாய்ந்து- ய் = சாந்து
கலவை = சாந்து
*************************
சாந்து(பெ)
சந்தனம்
கட்டிடக் கலவை
(சிமிண்டும் மணலும் கலந்த பூச்சுப்பொருள்; mixture of cement and sand.)
*************************