Skip to main content

விடை 4033


இன்று காலை வெளியான வெடி:

கோபப்பட்டு  வெட்டி   இறுதியாகச் சிக்கினால் போரில்  வீசப்படும் (5)

அதற்கான விடை:  வெடிகுண்டு = வெகுண்டு + டி

(ஆரம்பத்தில் "வெட்டி" என்பதற்கு பதிலாகத் "தாக்கு" என்ற சொல்லுடன்
இப்புதிரை அமைத்திருந்தேன். "தாக்கு" என்பதை "அடி" என்று கொண்டு அதிலிருந்து "டி" வரவழைக்க வேண்டும் என்ற திட்டத்தைச் சிலர் சரியாகப் புரிந்து கொண்டு விடை கண்டுபிடித்துவிட்டார்கள்.  ஆனால் 5 நிமிடத்தில் அது நியாயமாக இருக்காது என்று மாற்றிவிட்டேன்.)



இன்று காலை கருத்துரையில் முழு வலைக்கட்டப் புதிர் அமைக்குமாறு கேட்டிருப்பதைப் பார்த்தேன். இப்போது நான் வீட்டிலேயெ முழு நேரம் இருப்பதால் அதற்கு அவகாசம் கிடைக்குமென்று நம்புகிறேன். ஆனால் இது போல் நேரம் இனிமேல் கிடைக்காதோ என்று வேறு சிலவற்றையும் திட்டமிட்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
கோபப்பட்டு  தாக்கு  இறுதியாகச் சிக்கினால் போரில்  வீசப்படும் (5) 

கோபப்பட்டு
= வெகுண்டு
இறுதியாக தாக்கு
=(அ)டி = டி
சிக்கினால் = டி -->வெகுண்டு
= வெடிகுண்டு

போரில்  வீசப்படும்
= வெடிகுண்டு
********************
Blast from the past!
********************
April 21, 2018
அன்று காலை வெளியான வெடி: 
கோபமுற்று வெந்தயத்தை முதலில்  ரவையோடு சேர் (4)
இதற்கான விடை:  வெகுண்டு  = வெ + குண்டு (ரவை, துப்பாக்கியில் போடுவது)
***************
November 27, 2018
அன்று காலை வெளியான வெடி:
பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5) 
இதற்கான விடை: வெடிகுண்டு = வெகுண்டு + படித்து - ‍ பத்து
**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.