உதிரிவெடி 4038-4061 (மார்ச் 31, 2020)
வாஞ்சிநாதன்
*******************
இன்று மொத்தம் 24 வெடிகள் உள்ளன. இதில் 24 அல்லது 23 அல்லது 22ஐ உதிரியாவே வெடித்து, கட்டத்தை வெளியிடும் முன்னே சரியான விளக்கங்களுடன் விடையனுப்புவோர்க்கு முறையே 24 கேரட், 23 கேரட், 22 கேரட் தங்கப் பதக்கங்களை அளிக்க நான் ஆசைப்படுகிறேன்.அதை vanchinathan அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு இந்திய நேரப்படி 31 மார்ச் மாலை நாலரை மணிக்கு முன்பு அனுப்பவும். மாலை 5 மணிக்கு வலைக்கட்டங்கள் வெளியிடப்படும். (இன்று விடையளிக்க கூகிள் படிவம் கிடையாது). இருபத்திரண்டுக்கும் குறைவான விடைகளைக் கண்டுபிடித்தோர் 5 மணிக்குப் பிறகு வலைக்கட்டம் நிரப்பி மிச்சத்தையும் கண்டுபிடித்து, பழைய முறையில் அனுப்பவும்.
நெட்ப்ளிக்ஸ், அமேசான் என்று 10 நாட்களாகத் திரைப்படங்களையே பார்த்து வேறு மாறுதலான விஷயம் வேண்டும் என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். இதுதான் தக்க தருணம், அவர்களை இவ்வெடிப்பக்கம் வந்து ஒரு கை பார்க்கச் சொல்லுங்கள்.
அதிகமான வெடிகள் இருப்பதால் விடைகள் புதன் இரவோ (அல்லது வியாழன் இரவோ) வெளியிடப்படும்.
இரண்டு குறிப்புகள் "கோடிட்ட இடத்தை நிரப்புக" என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
~~~~~~~~~~~ **************** ~~~~~~~~~~~~~~~~~ குறுக்காக
1. கணவன்-மனைவி பந்தம் பதினைந்தில் முகிழ்த்தது (4)
3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக
இருக்கும் சமயம் (6)
8. மாட்டு நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ஆட்டி
உருவாக்கும் அமைப்பு (6)
9. கொடிய திட்டம் சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
11. நடு வாயில் பல்லில் சிக்கிய கல் (3)
12. கவனமாக வாத்து தலை சீவி இன்னொரு பறவையிடம் புகுந்தது (6)
14. பாரதியார் தலை சீவி மயக்க விதேசி மயங்கினாள் (6)
16. ரேவதிக்கு ஐந்து, லலிதாவுக்கு ஆறு (3)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
21. ___ ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
22. இரவோடிரவாகப் பாடு! (4)
நெடுக்காக
1. புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)
2. உயர்ந்த இழை உரசி புத்தகம் (3, 2)
4. ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)
5. ஒழுங்கு மாற ஆரம்பமின்றி காந்தி கடலை வறுத்தார் (5)
6. தொலைக்காட்சித் திரைக்கு வந்த ஒரு நட்சத்திரம் (4)
7. வாய்பாடு தெரிந்தவர்களால் போட முடியும் நெஞ்சில் ஒரு திட்டம் (7)
10. இலட்சணமான பெண் இதுபோல் இருப்பாள் என்று
கத்தியைப் பிரயோகித்து விவரி (3, 4)
13. _____ சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் (6)
15. அசையாமல் இடையொடியப் போகவில்லை சிறுவன் காலின்றித்
தடுமாற்றம் (2, 3)
16. பணத்தாசையில் முதலாளிகள் செய்வது துளி ரசம் கலந்து
கடலையால் செய்தது (5)
17. காற்றில் கரைந்து முதல்வர்கள் ஆண்டவனிடம் விண்ணப்பித்தால்
யாருக்கும் கிடைக்கும் (4)
20. திருவள்ளுவருக்கு ஒரு கண் (2)
~~~~~~~~~~ ******** ~~~~~~~~~~~~
Comments
@ வி என் கிருஷ்ணன்: 4 x 7 = 28, F=ma, நிரைநேர் = புளிமா, இதெல்லாம் வாய்பாடு
வாய்ப்பாட்டு = vocal singing