Skip to main content

விடை 4031


இன்று காலை வெளியான வெடி:
 
பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)

அதற்கான விடை:  பரவலாக = பலா + கவர


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.


Comments

Raghavan MK said…


A peek into today's riddle!

ஒரு பழைய வானிலை அறிக்கை!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர் ,விமான நிலையம், தேனாம்பேட்டை, நந்தனம், தரமணி மேற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
**********
பரவலாக என்று கூறும்போதே பெருமளவில் என பொருள் வருகிறது. இப்படியிருக்க புதிரில் பரவலாக எனும் விடைக்கு பெருமளவில் காணப்படுகின்ற என்று இரண்டு சொற்களை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். காணப்படுகின்ற எனும் சொல் இங்கு மிகையானதொரு விளக்கமாக தோன்றுகிறது.!
எ.கா :-
பெரும் வெண் கொக்கு என்றும் அழைக்கப்படும் இப்பறவை உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகிறது. (பெருமளவில் காணப்படுகின்றது).
******************************
பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)

கனி ஒன்று= பலா
போராட்டம் --anagram indicator for பலா+கவர
= பரவலாக

= பெருமளவில் (காணப்படுகின்ற)
******************************
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100) 
Muthu said…
மன்னிக்கவும். என் புரிதலில், "பெருமளவில் கனி ஒன்று கவர போராட்டம் (5)" என்று இருந்தால் வாக்கியம் முழுமையாகாது. "பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)" என்னும் பொழுது வாக்கியம் முழுமையடைவதோடு, புதிர் விரும்பிகளை சர்ரென்று அதிகம் திசை திருப்பிக் குழப்ப வைக்கிறது.
Raghavan MK said…
உங்கள் கருத்து சரியே!
திசை திருப்பும் உத்தியில் ஆசிரியர் வல்லவர்.
Vanchinathan said…
பலா பெறும் போராட்டமோ மாபெரும் போராட்டமோ, இப்போது காய்கறிக் கடைககுச் சென்றால் மக்கள் எல்லாbஅற்றையும் அள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறாற்கள்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்