இன்று காலை வெளியான வெடி:
பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)
அதற்கான விடை: பரவலாக = பலா + கவர
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
A peek into today's riddle!
ஒரு பழைய வானிலை அறிக்கை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர் ,விமான நிலையம், தேனாம்பேட்டை, நந்தனம், தரமணி மேற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
**********
பரவலாக என்று கூறும்போதே பெருமளவில் என பொருள் வருகிறது. இப்படியிருக்க புதிரில் பரவலாக எனும் விடைக்கு பெருமளவில் காணப்படுகின்ற என்று இரண்டு சொற்களை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். காணப்படுகின்ற எனும் சொல் இங்கு மிகையானதொரு விளக்கமாக தோன்றுகிறது.!
எ.கா :-
பெரும் வெண் கொக்கு என்றும் அழைக்கப்படும் இப்பறவை உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகிறது. (பெருமளவில் காணப்படுகின்றது).
******************************
பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)
கனி ஒன்று= பலா
போராட்டம் --anagram indicator for பலா+கவர
= பரவலாக
= பெருமளவில் (காணப்படுகின்ற)
******************************
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)
திசை திருப்பும் உத்தியில் ஆசிரியர் வல்லவர்.