இன்று காலை வெளியான வெடி:
வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4)
அதற்கான விடை: ததும்பு;
(அச்செய்தியைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது)
"தெரிந்ததும் புதையலை " என்பதில் புதைந்திருக்கிறது விடை.
கண்ணீர்வழிதல் = ததும்புதல்;
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
நாளைய முழுக்கட்டப் புதிருக்கு இன்று காலை ஏழெட்டு பேர் ஆதரவு தெரிவித்ததால் இன்று பகலில் 17 குறிப்புகள் அடங்கிய புதிரைச் செய்து முடித்தேன். அவ்வளவுதான் இனிமேல் கடையை இழுத்து மூடிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது அந்த ஏழெட்டு பேர் தடுத்தாட்கொண்டு எல்லோருக்கும் மழை பொழிய வைத்துள்ளனர்.
முன்பே சொன்னபடி கட்டங்களில் ஒரு இடைஞ்சல் என்னவென்றால் சில புதிர்கள் மற்ற விடைகளின் உதவியால் யோசிக்காமல் விடை கிடைக்க வழி செய்துவிடும்.
அதனால் காலையில் 17 உதிரிகளாக மொத்தமாக வெளியிட்டு மாலையில் கட்டத்தோடு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் விருப்பத்தைக் கருத்துரையில் தெரிவிக்கலாம்.
Comments
******************************
வழி தெரியாமல் புதையலைத் தேடியலைந்து, வாடி , வதங்கி, கடைசியில் புதைத்தவரை நாடியதும் மகிழ்ச்சி ததும்ப கண்டேன் புதையலை !
******************************
வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4)
தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர்
= விடை தெரிந்ததும் புதையலில்
புதைந்துள்ளது
= தெரிந் [ததும் பு] தையலைப்
= ததும்பு
வழி = ததும்பு
(வழிதல் = ததும்புதல்)
******************************
-Raja
கட்டங்களோடு திங்கள் காலை வெளியிடலாமே! That will be more apt!
போட்டாலும் சந்தோஷமே.
கற்கண்டில்
எந்த பகுதி அதிகம் இனிக்கும்??