Skip to main content

விடை 4013


இன்று காலை வெளியான வெடி:
வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4) 

அதற்கான விடை:  ததும்பு;

 (அச்செய்தியைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது)

"தெரிந்ததும் புதையலை " என்பதில் புதைந்திருக்கிறது விடை.
கண்ணீர்வழிதல் = ததும்புதல்;


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.


நாளைய முழுக்கட்டப் புதிருக்கு இன்று காலை ஏழெட்டு பேர் ஆதரவு தெரிவித்ததால் இன்று பகலில் 17 குறிப்புகள் அடங்கிய புதிரைச் செய்து முடித்தேன். அவ்வளவுதான் இனிமேல் கடையை இழுத்து மூடிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது  அந்த ஏழெட்டு பேர் தடுத்தாட்கொண்டு எல்லோருக்கும் மழை பொழிய வைத்துள்ளனர்.

முன்பே சொன்னபடி கட்டங்களில் ஒரு இடைஞ்சல் என்னவென்றால் சில புதிர்கள் மற்ற விடைகளின் உதவியால் யோசிக்காமல் விடை கிடைக்க வழி செய்துவிடும்.

அதனால் காலையில் 17 உதிரிகளாக மொத்தமாக  வெளியிட்டு  மாலையில் கட்டத்தோடு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் விருப்பத்தைக் கருத்துரையில் தெரிவிக்கலாம்.


 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
******************************
வழி தெரியாமல் புதையலைத் தேடியலைந்து, வாடி , வதங்கி, கடைசியில் புதைத்தவரை நாடியதும் மகிழ்ச்சி ததும்ப கண்டேன் புதையலை !
******************************
வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4) 

தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர்
= விடை தெரிந்ததும் புதையலில்
புதைந்துள்ளது
= தெரிந் [ததும் பு] தையலைப்
= ததும்பு

வழி = ததும்பு
(வழிதல் = ததும்புதல்)
******************************
Anonymous said…
Go for the grid. It’s more fun.
-Raja
Nathan NT said…
I think your suggestion is good. We can have the grid later.
எங்களுக்கு ‘புதையல்’ உங்கள் கட்டமைப்பு புதிர் மட்டுமே. அது எப்பட எப்போது கிடைத்தாலும் சரி
Raghavan MK said…
(அதனால் காலையில் 17 உதிரிகளாக மொத்தமாக வெளியிட்டு மாலையில் கட்டத்தோடு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.)

கட்டங்களோடு திங்கள் காலை வெளியிடலாமே! That will be more apt!



Vanathy said…
எந்த நேரம் புதிர்
போட்டாலும் சந்தோஷமே.
கற்கண்டில்
எந்த பகுதி அதிகம் இனிக்கும்??

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்