இன்று காலை வெளியான வெடி:
அழகிய மொழியொன்று கலந்தது மிகக் குறைவான அளவு நஞ்சு! (5)
அதற்கான விடை: அமிழ்தம் = அம் + தமிழ்
அம் = அழகிய (கொஞ்சம் பழங்கால செய்யுள் தமிழில்)
மொழியொன்று = தமிழ்
அளவுக்கு அதிகமான அமிழ்தம் நஞ்சு என்பதால்
நஞ்சு குறைவாக இருக்கும்போது அது அமிழ்தம்தானே!
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
எதிர்மறையான பொருள் கொண்ட விடையுடன் அமைக்கப்பட்ட
புதுமையான புதிர் இன்று! 👏
*******************************
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
(குறள்)
மழை பெய்வதால் உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
*************************
அம்(உ)
=அழகிய
அங்கயற்கண்ணி=அம்+கயல்+கண்ணி
*************************
அழகிய மொழியொன்று கலந்தது மிகக் குறைவான அளவு நஞ்சு! (5)
அழகிய = அம்
மொழியொன்று
= தமிழ்
கலந்தது = அம்+தமிழ் = அமிழ்தம்
=மிகக் குறைவான அளவு நஞ்சு!
[அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு (பழமொழி)]
*************************
அமிழ்தம்
தேவர் உணவு,அமுதம்,அமிழ்தம்.
அழியாத அமரத்துவம் தரவல்லது; அழிவின்மை அமிர்தா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும்.
*************************
அளவு மீறாவிட்டால் நஞ்சும் அமிர்தம்?
கணித பேராசிரியருக்கு தெரியும் If A then B implies If !B then !A. அனால் பெரும்பாலோனோர் If A then B implies If !A then !B என்று தவாறாக எண்ணுவார்கள். அதை வைத்து வேடிக்கை காட்டுகிறார்.
இது தெரிந்து என்ன பயன்? பெயிலாயிட்டு இப்படை சப்பை கட்டு கட்டுகிறேன்
ஆழ்ந்துக் கலந்து
*அமிழ்தம்* படைத்து
அவையோர் அருந்த
அரும்பணிச் செய்து
திறன்மிகு கலைஞர்
தீட்டியப் புதிர்
தீஞ்சுவைக் கொண்டது!
ரவி சுந்தரம் லாஜிக் மிகவும் சரியானது.