Skip to main content

விடை 4004


இன்று காலை வெளியான வெடி:
ஒரு  மணி கட்டு ஊன்றிக் கிளறிய மண்ணிலிருந்து தோன்றியது (5)
அதற்கான விடை:  முளைத்தது  = முத்து + தளை

முத்து = ஒரு மணி
தளை = கட்டு (சுதந்திரமாக இயங்க விடாமல் செய்வது)




இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.


மண்ணில் விதைத்து மழைநீரை அருந்திபின்
விண்ணோக்கிச் செல்லும்  விளைபயிர்    எண்ணிக்
கருத்தொன்றை நாம்விதைத்தால் ஈடேறும் காண்பீர்
விரும்பிய  யாவும்  விரைந்து

முளைத்தது என்ற சொல்லை வைத்து ஒரு வெண்பா எழுத வேண்டுமென்றுதான்  நினைத்தேன். நான் எண்ணியது ஈடேறவில்லை.  " விளைபயிர்"தான்  கொண்டுவர முடிந்தது!
 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
முத்தான முத்தல்லவோ உதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான புதிரல்லவோ
வாஞ்சியார் தந்த வெடியல்லவோ! !
*************************
ஒரு  மணி = முத்து
கட்டு = தளை
கிளறிய
= தளை கிளறியபின் ளைத
ஊன்றி
= ளைத வை முத்துக்குள் ஊன்ற
= மு(ளை)த்(த)து
= முளைத்தது
= மண்ணிலிருந்து தோன்றியது
*************************
Vanchinathan said…
முத்தைப்போல் நல்ல மொழியாம் தமிழதில்
இத்தகு சொல்லமைப்பு ஏராளம் - கொத்தியதைக்
கண்டெடுப்ப தென்தொழில் கற்பனை வாய்த்தோர்க்கு
உண்டாம் வெடியால் உவப்பு
Vanchinathan said…
"கற்பனை உள்ளவர்க்கு" என்று மூன்றாம் அடியை மாற்றி வாசிக்கவும். அப்போதுதான் வெண்பாவின் தளை சரியாக இருக்கும்.
Raghavan MK said…
புதிரில் மற்றும் வெண்பாவிலும் தளையா!! 😌

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்