இன்று காலை வெளியான வெடி:
ஒரு மணி கட்டு ஊன்றிக் கிளறிய மண்ணிலிருந்து தோன்றியது (5)
அதற்கான விடை: முளைத்தது = முத்து + தளை
முத்து = ஒரு மணி
தளை = கட்டு (சுதந்திரமாக இயங்க விடாமல் செய்வது)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
மண்ணில் விதைத்து மழைநீரை அருந்திபின்
விண்ணோக்கிச் செல்லும் விளைபயிர் எண்ணிக்
கருத்தொன்றை நாம்விதைத்தால் ஈடேறும் காண்பீர்
விரும்பிய யாவும் விரைந்து
முளைத்தது என்ற சொல்லை வைத்து ஒரு வெண்பா எழுத வேண்டுமென்றுதான் நினைத்தேன். நான் எண்ணியது ஈடேறவில்லை. " விளைபயிர்"தான் கொண்டுவர முடிந்தது!
Comments
*************************
முத்தான முத்தல்லவோ உதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான புதிரல்லவோ
வாஞ்சியார் தந்த வெடியல்லவோ! !
*************************
ஒரு மணி = முத்து
கட்டு = தளை
கிளறிய
= தளை கிளறியபின் ளைத
ஊன்றி
= ளைத வை முத்துக்குள் ஊன்ற
= மு(ளை)த்(த)து
= முளைத்தது
= மண்ணிலிருந்து தோன்றியது
*************************
இத்தகு சொல்லமைப்பு ஏராளம் - கொத்தியதைக்
கண்டெடுப்ப தென்தொழில் கற்பனை வாய்த்தோர்க்கு
உண்டாம் வெடியால் உவப்பு