Skip to main content

சரவெடி மார்ச் 2020 .

சரவெடி மார்ச் 2020

வாஞ்சிநாதன்

***********************
வீட்டுக்கு வீடு தெருப்பக்கம் போக முடியாமல்  கணினி/கைப்பேசிக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கும் ஆர்வலர்களே! இதோ வந்துவிட்டது பொங்கலிலிருந்து இரண்டு மாதத்தில் இன்னொரு சரவெடி.

நேற்று காலை ஆறு மணிக்குப் பாதியும், பின்னர் மாலை 4 மணிக்கு எஞ்சியவற்றையும் ஆக இரண்டு தவணைகளில்  உதிரியாக வந்த 17 வெடிகளும் இப்போது கோக்கப்பட்டு சரமாக வருகின்றன. இதை உருவாக்க ஹரிபாலகிருஷ்ணனின்  புதிர்மயம் செயலி உதவியுள்ளது.

உங்களால் இதுவரை விடுவிக்க இயலாத புதிர்களை  வலைக்கட்டத்தில் உரசிச் செல்லும் மற்ற விடையின் உதவியால் கண்டுபிடிக்கலாம்.





குறுக்காக

 5. வாலில்லாக் காளை  சாணி? (2)
 6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)
 7. அழகான  காட்டுப்புற மார்வாடி  பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)
 8.  ஒரு நாய் விளையாட்டில் வெல்வது  சிம்ம  இடை பரிமாற்றம் (3)
 9.  கரோனா  தொற்றியதும்  முகத்தை மறைத்துச் செய் (3)
11. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் முனை வைத்தாள் (3)
13. முன்னாள் மீன் முட்டையில் இருப்பதா மாட்டு வால்? (4)
16. மாதவி  ஆசிரியரின் ஆயுதம்? (7)
17. சொல் வாத்தியம் (2)

நெடுக்காக
 1. மரியாதையாகக் கால் கால் வைத்தாள் கள்ளி (4)
 2.  துவை, மனம்  காயாதே, காமம் இல்லாத மாற்றம் அவசியம் (5)
 3. நடத்தை  இல்லாமல் செய்  (3)
 4.  அச்சத்துடன் நாணம் இடை தழுவ  ஊரடங்கு உத்தரவின் போது
     செய்யக்  கூடாதது  (4)
10. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம்  இஸ்லாமியப்
      பெண்ணுக்கு அடையாளம் (5)
12. நிறைய பேரும் ஓரளவில் ஒரு பாதி விழுங்கினர் (4)
14. ராகவனால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர் நண்பர்
      பாதி  முதுமையடையாதவர் (4)
15. மத்யம  நிலையுடன் இருக்கும் ராகம் (3)

Comments

Nagarajan Appichigounder said…
Wow. Wonderful-nga Vanchi. maathavi clue is very nice and thanks for making me to learn a new word.
-Nagarajan Appichigounder.
Ramiah said…
குறுக்கெழுத்துத் துணையின்றி தனி வெடியாக வெடித்ததில் மாதவி மயக்கிவிட்டாள். மூன்றெழுத்துக் கிடைத்தவுடன் நான் அறிந்திடாத வார்த்தை கிடைத்தது. நல்ல பொழுதுபோக்கு, சிந்திக்க வைத்தது, மிகவும் அனுபவிக்கமுடிந்தது.
I got frustrated with the use of square formation. While I completed all horizontal cells, problems started when I started filling up vertical cells.
Advise how to replace a cell letter with an alternative letter
Anonymous said…
Good job Sir. As the shut down is extended for multiple weeks, hoping to see more grids in the coming days. My thanks to the actual grid implementor, nicely done.

-Raja
Mr Raja
Can you kindly clarify my query since you have found the grid working perfectly
Mr kanaka Sabathy you can type on the same letter new
Letter. Even back space can be used
Thanks very much Mr Krishnan. Your backspace idea perfectly worked. I completed and submitted.
உஷா said…
கட்டத்தில் தவறான எழுத்தை மாற்றுவது எப்படி என்று தெரியாததால் மீண்டும் ஒருமுறை பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று. மாதவி ஆசிரியரிடம் புதிய விஷயம் கற்றேன். ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். சர சரவென மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றி
Fantastic puzzles Vanchi sir. It was more challenging than the Pongal crossword. Since the lockdown is extended can we expect for more 😛

And for people who are confused about removing a wrong letter. Just press the backspace button (the button after ழ) in the keypad. It will clear the letter in the selected cell.
After Mr Krishnan's suggestion I used the backspace key in the computer key board itself to remove letters in cells. It was equally effective. Thanks to Mr Krishnan again.I felt a bit upset when his name was not there in the winners' list.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்